ஜெய்பீம் டைரக்டரின் பாலிவுட் என்ட்ரி தோசா கிங்...கதை யாருடையதுன்னு கெஸ் பண்ண முடியுதா?
சென்னை : சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவத்தை சினிமா ஆக்கி உலகத்தையே உலுக்கி, திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் டி.ஜே.ஞானவேல். இதனால் தற்போது இவர் இயக்கும் படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
எழுத்தாளரும் டைரக்டருமான டி.ஜே.ஞானவேல், ரத்தம் சரித்திரம் என்ற படத்திற்கு கதை மற்றும் வசனங்கள் எழுதி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். பிறகு பயணம், பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படங்களுக்கு கதை எழுதினார். கூட்டத்தில் ஒருவன் படத்தின் மூலம் டைரக்டரான ஞானவேலுக்கு புகழை அள்ளி கொடுத்து, அடையாளம் காட்டியது ஜெய்பீம்.
பழங்குடி இன மக்களின் வாழ்க்கை, நீதிக்கான அவர்களின் போராட்டத்தை ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையை படமாக எடுத்தார்.ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவுடன் மற்றொரு படத்தில் இவர் இணைய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதற்கான கதை தயாரிப்பு வேலைகளும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

டி.ஜே.ஞானவேலின் பாலிவுட் என்ட்ரி
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ஜெய்பீம் டைரக்டர் ஞானவேல் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியில் இவர் இயக்க போகும் முதல் படத்திற்கு தோசா கிங் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை Junglee pictures தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தோசா கிங் கதை யாருடையது
தோசா கிங் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை தான் என சொல்லப்படுகிறது. இந்த முறை சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்ட கதையை தான் தோசா கிங் படத்தில் சினிமாவாக எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.ஜெய்பீம் படத்தை தொடர்ந்து தோசா கிங் படத்திற்கும் ஞானவேல் தான் திரைக்கதை எழுதுகிறார்.

அடுத்த அவார்டு கன்ஃபார்ம்
ஜீவஜோதி வழக்கு 18 ஆண்டுகளாக நடத்தப்பட்டு, ராஜகோபால் தான் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. . ஜீவஜோதியின் போராட்டம் பற்றி சொல்லப்படாத கதையை தான் ஞானவேல், தோசா கிங் படத்தில் சொல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜீவஜோதி சாந்தகுமாரிடம் இருந்து கதை உரிமத்தையும் படக்குழு வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

ஞானவேல் என்ன சொல்கிறார்
இது பற்றி ஞானவேல் அளித்த பேட்டியில், இந்த வழக்கு பற்றி நான் பத்திரிக்கையாளராக இருந்த காலத்தில் இருந்த க்ளோசாக கவனித்து வருகிறேன். ஜீவஜோதியின் சட்ட போராட்டத்தை புதிய கோணத்தில் சினிமாவாக தர போகிறேன். இதற்கான கேரக்டர்கள் தேர்வு நடந்து வருகிறது. Junglee pictures உடன் எனது இந்த பயணத்தை தொடர ஆர்வமாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம்
Junglee pictures நிறுவனமும், தோசா கிங் கதாபாத்திரங்கள் மற்றும் கதையை விவரிப்பதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம். ஞானவேல் பத்திரிக்கையாளராக இருந்து டைரக்டரானவர் என்பதால் இந்த கதையில் நம்பத்தன்மையான கதை, உண்மை ஆகியன சமநிலையில் இருக்கும் என நம்புகிறோம்.வசீகரிக்கும் வகையில் கதை சொல்லி, அதை உயிரோட்டமாகவும் திரையில் கொண்டு வரக் கூடியவர் என்பதால் அவருடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











