Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
15 வருஷமா என்னோட மனசுல இருந்த கதை தான் ஜெய் பீம் -மனம் திறந்த இயக்குநர்
சென்னை : நடிகர் சூர்யா முதல்முறையாக வழக்கறிஞர் வேடமேற்று நடித்துள்ள படம் ஜெய் பீம்.
அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் டிஜே ஞானவேல்.
25 ஆண்டுகளை கடந்த கமலின் அவ்வை ஷண்முகி...சில சுவாரஸ்ய தகவல்கள்
இந்நிலையில் இந்தப் படத்தின் உருவாக்கம் குறித்து அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.

ஜெய் பீம் படம்
நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் வேடமேற்று நடித்துள்ள படம் ஜெய் பீம். இந்தப் படத்தின்மூலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடும் கேரக்டரில் அவர் நடித்துள்ளார். படம் அமேசான் ப்ரைமில் வெளியான நிலையில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

கமல் பாராட்டு
பல்வேறு தரப்பினரும் படத்தை பாராட்டி வருகின்றனர். உலகநாயகன் கமலும், தூங்காத இரவை இந்தப் படம் அளித்ததாக பாராட்டியுள்ளார். தீபாவளியையொட்டி இந்தப் படம் வெளியான நிலையில் படத்தின் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

உண்மைக் கதை
உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாக சில தினங்களை கடந்துள்ள நிலையில், படம் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் ஜெய் பீம் படத்தை பாராட்டி ட்வீட் போடாவிட்டால் தான் சினிமாவில் இருக்கவே தகுதியற்றவன் என்று இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா தயாரிப்பு
ஜோதிகா மற்றும் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். கடந்த 2ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது. படத்தை இயக்கியுள்ள டிஜே ஞானவேலுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

படம் குறித்து ஞானவேல்
இந்நிலையில் இந்தப் படத்தின் கதை தனது மனதில் 15 வருடங்களாக இருந்து வந்ததாக ஞானவேல் தெரிவித்துள்ளார். அந்தக் கதையை சிறப்பான படமாக எடுக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசை தற்போது நனவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிரூபித்த ஞானவேல்
படத்தின் நாயகன் சூர்யா என்றாலும், பழங்குடியினத்தை சேர்ந்த தம்பதிகளாக நடித்துள்ளவர்களும் தங்களது நடிப்பால் கவனம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உண்மையில் நடைபெற்று வருவது அவலமாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் உண்மை சம்பவங்களை காட்சிப்படுத்துவதில் தன்னை நிரூபித்துள்ளார் ஞானவேல்.