ஜெய் பீம் என்ற ஒற்றை வார்த்தை.. இந்தியா முழுக்க பேசு பொருளான நடிகர் சூர்யா.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: சூர்யா நடிக்கும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் #JaiBhim என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

நடிகர் சூர்யா நேற்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் சூர்யா. இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் 39வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதன்மூலம் படத்தின் பெயர் ஜெய் பீம் என தெரியவந்தது. இதில் நடிகர் சூர்யா வக்கீல் கெட்டப்பில் நடிக்கிறார். படத்தின் டைட்டிலும் சூர்யாவின் கெட்டபும் அடிதட்டு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சட்ட மேதை அம்பேத்கரை நினைவு படுத்துவதாக உள்ளது.

கூடும் எதிர்பார்ப்பு

கூடும் எதிர்பார்ப்பு

இந்நிலையில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே #JaiBhim என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. படத்தின் டைட்டிலே படம் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி முழக்கம்

வெற்றி முழக்கம்


சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், சூர்யாவின் #ஜெய்பீம் என்ற வெற்றி முழக்கத்தை திரைப்படத்தின் பெயராக வைத்தது மிக்க மகிழ்சி. பாபாசாகேப் அம்பேத்கரின் புகழ் நீண்ட காலம் ஓங்கி ஒலிக்கட்டும் என்பதே ஜெய்பீம் என்பதன் பொருள்.

JaiHind 1940ல் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது ஆனால் Jaibhim 1936ல் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்


மற்றொரு நெட்டிசனான இவர், ஜெய் பீம் என்ற ஒற்றை வார்த்தையின் மூலம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளார் சூர்யா. ஜெய் பீம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

உடைத்து எறியட்டும்

உடைத்து எறியட்டும்


சூர்யா படத்தின் டைட்டிலை கேட்ட இந்த நெட்டிசன், அம்பேத்கர் படத்தை வீட்டில் அலுவலக மேசையில் வைக்கத் தயங்கும் பலர் இன்னும் இருக்கின்றனர். ஜெய்பீம் அந்த தயக்கத்தை உடைத்து எறியட்டும். இனி தமிழ்நாடெங்கும் கூண்டில் அடைபட்டு நிற்கும் அம்பேத்கர் சிலைகள் விடுதலையாகி நிற்கட்டும்.. என பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கர் ரோலா?

அம்பேத்கர் ரோலா?

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் கெட்டப்பை பார்த்த இந்த நெட்டிசன், ஜெய் பீம்மில் அம்பேத்கர் ரோலா அல்லது வேறு ஏதாவதா என கேட்டுள்ளார்.

தியேட்டரிக்கல் ரிலீஸ்

தியேட்டரிக்கல் ரிலீஸ்


சூரரை போற்று படத்திற்கு பிறகு இந்தப் படம் இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் என தெரிகிறது. ஜெய் பீம்.. இந்தியாவின் மிகப்பெரிய தியேட்டிரிக்கல் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X