twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது ஜெய் பீம், மரக்காயர் படங்கள்

    |

    நியூயார்க் : நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான ஜெய் பீம் படம் சர்வதேச அளவில் சிறப்பான பல பாராட்டுக்களை பெற்று வருகிறது.

    இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றது.

    வாவ் செம... 5 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்!வாவ் செம... 5 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்!

    இந்நிலையில் தற்போது ஆஸ்கர் போட்டியில் ஜெய்பீம் மற்றும் மரக்காயர் படங்கள் நுழைந்துள்ளன.

    ஜெய் பீம் படம்

    ஜெய் பீம் படம்

    நடிகர் சூர்யா வழக்கறிஞராக முதல்முறையாக நடித்து வெளியான படம் ஜெய்பீம். பழங்குடியின பெண்ணின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் வழக்கறிஞராக சூர்யா நடித்திருந்தார். படத்தை அவரது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் கடந்த தீபாவளியையொட்டி அமேசான் பிரைமில் வெளியானது.

    ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்

    ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்

    இந்தப் படம் ஐஎம்டியில் 9.6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருந்தது. மேலும் இதுபோன்ற பல்வேறு சர்வதேச சாதனைகளை படம் படைத்தது. மேலும் ஆஸ்கரின் யூடியூப் பக்கத்தில் படத்தின் காட்சிகள் இடம்பெற்றன. மேலும் இயக்குநரின் பேட்டியும் இடம்பெற்றது.

    சிறப்பான அங்கீகாரம்

    சிறப்பான அங்கீகாரம்


    இந்த சாதனையை படைத்ததன்மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த அங்கீகாரத்தை படம் கொடுத்துள்ளது. மேலும் தற்போ இந்தப் படம் ஆஸ்கர் விருது பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. உடன் மோகன்லாலின் மரக்காயர் படமும் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளது.

    ஆஸ்கர் விருது பட்டியல்

    ஆஸ்கர் விருது பட்டியல்

    இந்த ஆண்டிற்கான விருது பட்டியலில் சர்வதேச அளவில் 276 படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த படங்களுக்கான வாக்கெடுப்பு வரும் 27ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டில் இந்த காலம் கொரோனா காரணமாக பிப்ரவரி 28ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

    விருது பட்டியல்

    விருது பட்டியல்

    மேலும் இந்தப் பட்டியலில் பீயிங் தி ரெக்கார்டோஸ், பெல்பாஸ்ட், கேண்டிமேன், கோடா, எண்கான்டோ, ஹவுஸ் ஆப் குச்சி, ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், வெஸ்ட் சைட் ஸ்டோரி, தி பவர் ஆப் த டாக் உள்ளிட்ட படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    சர்வதேச படங்கள்

    சர்வதேச படங்கள்

    சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானின் டிரைவ் மை கார், இத்தாலியின் தி ஹேண்ட் ஆப் காட், ஈரானின் எ ஹீரோ, நார்வேயின் தி வொர்ஸ் பர்சன் இன் தி வேர்ல்ட் போன்ற படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    ஜெய்பீம், மரக்கார் படங்கள்

    ஜெய்பீம், மரக்கார் படங்கள்

    இதேபோல முன்னதாக அறிவிக்கப்பட்ட 26 அனிமேஷன் படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் நெட்பிளக்சின் தி மிட்செல் வெஸ் தி மெஷின்ஸ், பெல்லி போன்ற படங்களும் அடக்கம். இதனிடையே இந்த பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் மற்றும் மோகன்லாலின் மரக்கார் படங்களும் இடம்பெற்றுள்ளன.

    94வது ஆஸ்கர் விருது விழா

    94வது ஆஸ்கர் விருது விழா


    94வது ஆஸ்கர் விருதுகளின் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வரும் பிப்ரவரி 8ம் தேதி நாமினேஷன் அறிவிக்கப்படும். வரும் மார்ச் 27ம் தேதி விருது வழங்கும் விழா ஹாலிவுட்டின் டோல்பை திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த விழா ஏபிசி தொலைக்காட்சியின் மூலம் 200 பகுதிகளில் உலகெங்கிலும் ஒளிபரப்பாக உள்ளது.

    English summary
    Jai Bhim, Marakkar movies in the Oscar movie list
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X