twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “ஜெய்பீம்“ படத்தில் நடித்த ஜோசிகா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாரா?... தந்தை விளக்கம் !

    |

    சென்னை : சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் நடித்த சிறுமியை பள்ளியில் இருந்து நீக்கியதாக வெளியான செய்தி குறித்து அவரது தந்தை விளக்கமளித்துள்ளார்.

    உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு உருவான ஜெய் பீம் திரைப்படம், அமேசான் பிரைமில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

    இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சூர்யாவின் 39பது படம்

    சூர்யாவின் 39பது படம்

    சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நடிகர் அருண் விஜய்யின் மகன் இப்படத்தின் முக்கிய கதாபாத்தில் நடிக்க உள்ளார்.

    ஒரு உண்மை சம்பம்

    ஒரு உண்மை சம்பம்

    இது பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவமாகும். ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடித் தொடங்குகிறாள். உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறுமி ஜோசிகா

    சிறுமி ஜோசிகா

    படத்தில் இருளர் சிறுமியாக நடித்த ஜோசிகா மாயாவிற்கு சினிமாவில் நடித்தத்தால் ஒரு சிக்கல் வந்திருக்கிறது என்று செய்தி பரவியது. அவர் படிக்கும் பள்ளியிலிருந்து அவரை டி.சி.கொடுத்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.

    கொஞ்சமும் உண்மை

    கொஞ்சமும் உண்மை

    இந்நிலையில் இது குறித்து பேசிய ஜோசிகாவின் தந்தை சக்தி, இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வெப் சீரிஸ் ஒன்றில் அதிதி பாலன் மகளாக நடித்து முடித்திருக்கிறார். மேலும் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. படிப்பும் நடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Jai Bhim film getting expelled from her school went viral among the users of the micro blogging social media site. The girl acted as a daughter of Rajakannu-Sengeni who belong to the tribal community.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X