ஜெய் பீம் படத்தின் முதல் பாடல்... நாளைக்கு வரைக்கும் காத்திருங்க!
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் நவம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ள படம் ஜெய் பீம்.
இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் சிறப்பான பல படங்களை தந்து வருகிறார். இவரது நடிப்பில் வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவரது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பில் தற்போது ஜெய் பீம் என்ற படம் வரும் நவம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது.

அமேசான் ப்ரைமில் வெளியீடு
அமேசான் ப்ரைமில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. தா சே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யா நீதிக்காக போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்பு படத்தின் டீசரை சூர்யா வெளியிட்டார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என்று அவர் டீசர் வெளியீட்டில் தெரிவித்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்பிரைசஸ் மூலம் சிறப்பான படங்களை அவர் தொடர்ந்து தந்து வருகிறார்.

நீதிக்காக போராடும் வழக்கறிஞர்
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்காக வழக்குத் தொடர்ந்து நீதிக்காக போராடுவதாக அவரது கேரக்டர் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவர்களுக்கு அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தை ந்த டீசரில் அவர் தெரிவித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசை
ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தில் பிரகாஷ் ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவையும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் மிகவும் வலிமையாக அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











