மகுடம் சூட்டாத ஜெய்பீம்... மௌனம் காக்கும் சூர்யா… தேற்றும் ரசிகர்கள் !

சென்னை : ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய்பீம் படம் இடம் பெறாதது குறித்து சூர்யா இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருக்கிறார்.

நிச்சயம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்வாகாதது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

சூர்யாவுக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஆனாலும், இதுவே பெரிய சாதனை தான் என்றும் ரசிகர்கள் சூர்யாவை தேற்றி வருகின்றனர்.

ஜெய்பீம்

ஜெய்பீம்

உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். ஓடிடி தளத்தில் கடந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் மொழி, இனம், கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இந்த திரைப்படம் 1990களில் நடந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது செய்யாத தவறுக்காக காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இதில் பாதிக்கப்பட்ட செங்கேணிக்கு நீதி கிடைக்க சட்ட ரீதியாக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இடம் பெறவில்லை

இடம் பெறவில்லை

பல்வேறு தடைகளை கடந்து சாதித்த ஜெய் பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் காட்சி இடம்பெற்றது. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படம் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும். ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று இறுதிப் போட்டிக்கான நாமினேஷன் பட்டியலில் ஜெய்பீம் தகுதி பெறவில்லை.

சூர்யா மௌனம்

சூர்யா மௌனம்

பல கட்ட போராட்டங்களை பல விருதுகளை குவித்த ஜெய்பீம் நிச்சயம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் இடம்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்வாகாதது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால், இது குறித்து சூர்யாவோ, சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமோ எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார். இது நிச்சயம் சூர்யாவுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் தான். ஆனால், இதுவே பெரிய சாதனை தான் என்றும் ரசிகர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X