உண்மையை உரக்க சொன்னால்… உண்மையான மாற்றம் நிகழும்... சூர்யா ட்விட் !
சென்னை : உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும் என்று ஜெய்பீம் திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு சூர்யா ட்விட் செய்துள்ளார்.
இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். இப்படத்தை தா செ ஞானவேல் இயக்கி உள்ளார்.
இதில் முக்கியமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

சூர்யாவின் 39வது படம்
சூர்யாவின் 39வது திரைப்படமான ஜெய்பீம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கி உள்ளார். ரஜிதா விஜயன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

ஒரு உண்மை சம்பவம்
ஜெய்பீம் திரைப்படம் ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாகும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, 1993ம் ஆண்டு, ஒரு பழங்குடி இன பெண்ணுக்காக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டீசர் ரிலீஸ்
சூர்யாவின் 2 டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ந் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. மனு தாரர் பழங்குடி இனம் என்பதால் இந்த வழக்கு ஒரு விளம்பரத்திற்காக போடப்பட்ட வழக்கு என்ற வசனத்துடன் டீசர் ஆரம்பமாகிறது.

மறுக்கப்பட்ட நீதி
ஒழித்துக்கட்டிவிடுவேன் என்று போலீசாரல் அடித்து இழுத்து செல்வதும்,... ஏன்னு கேட்க நாதி இல்லாமல் செத்துமடிகிறோம் காப்பாத்துங்க சார் என்று கதறுவதும் மனதை ரணப்படுத்துகிறது. இதில் வழக்கறிஞராக வரும் சூர்யா எந்த ஆதாரமும் இல்லாமல் வழக்கு போடுவது வெறும் 3 போலீசை எதிர்த்து இல்ல இந்த அரசாங்கத்தை எதிர்த்து, பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கபட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் போன்ற வசனங்கள் இந்த டீசரில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முக்கிய ரோலில்
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் படப்புகழ் ரஜினா விஜயன், சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் அக்காவாக நடித்த லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், அருண் விஜய்யின் மகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உரக்க சொன்னால்
ஜெய்பீம் டீசர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதை காட்டிலும் உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய்பீம் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











