மேலும் இருவிருதுகளை தட்டி தூக்கிய ‘ஜெய்பீம்‘… குவியும் வாழ்த்து !

டெல்லி : நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம் திரைப்படத்தை கௌரவிக்கும் வகையில் மேலும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ஜெய் பீம் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்றது.

ஜெய்பீம்

ஜெய்பீம்

இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன்படி12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜெய்பீம் திரைப்படம் இருவிருதுகளை பெற்றுள்ளது.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தில் இருளர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், காவலர்களின் காட்டுமிரட்டித்தனத்தின் உச்சம் குறித்தும் தோலுரித்து காட்டப்பட்டது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Recommended Video

Oscar 2022 | இதுவரை Oscar வாங்கிய இந்திய படங்கள் | Rewind Raja | Filmibeat Tamil
இயல்பான நடிப்பு

இயல்பான நடிப்பு

வழக்கறிஞர் சந்துரு ரோலில் சூர்யா அழகாக இயல்பாக நடித்திருந்தார். ராசாக்கண்ணுவாக மணிகண்டன், செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நடித்திருந்தார்கள் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்கள் இருவரின் கதாபாத்திரம் இயல்பாக இருந்தது.

இருவிருதுகள்

இருவிருதுகள்

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற 12வது தாதாசாகேப் சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தில் ராசகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X