»   »  இனி தோசை சுடுவியா, சுடுவியா?: ஃபீல் பண்ணும் ஜெய்

இனி தோசை சுடுவியா, சுடுவியா?: ஃபீல் பண்ணும் ஜெய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெய் ஒரேயொரு தோசை சுட்டதால் வந்த விளைவுகளை பாருங்களேன்.

ஜோதிகா நடித்து வரும் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்த 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தோசை சவாலை அறிமுகம் செய்து வைத்தது. அதை பார்த்து பல தமிழ் திரையுலக பிரபலங்களும் தோசை சுட்டு மனைவிக்கு கொடுத்து அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்த தோசை சவாலை நடிகர் ஜெய்யும் ஏற்றார்.

தோசை

இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதை அடுத்து ஜெய் தோசை சவாலை ஏற்றார். தோசை சுட்டு அதை நடிகை அஞ்சலிக்கு கொடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

அஞ்சலி

அஞ்சலி

ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து பேசுவதே இல்லை. இந்நிலையில் அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து காதலை உறுதிபடுத்திவிட்டார் ஜெய் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெய்

ஜெய் சுட்டுக் கொடுத்த தோசை சுவையாக இருந்ததாகவும், நமக்கு அன்பானவர்கள் நமக்காக சமைப்பதை பார்ப்பது நன்றாக உள்ளதாகவும் ட்வீட்டியுள்ளார் அஞ்சலி.

சக்திவேல்

சக்திவேல்

@Actor_Jai @yoursanjali : மகளிர் மட்டும் படத்திற்கு விளம்பரம் பண்றது ஓ.கே..மொதல்ல நீங்க நடிச்ச படங்களுக்கு பண்ணுங்க.. தயாரிப்பாளர்களை ஆதரியுங்கள் ப்ரோ என இயக்குனர் சக்திவேல் ட்வீட்டியுள்ளார். ஒரு தோசை சுட்டது தப்பாப் போச்சே என்று இப்பொழுது ஃபீல் பண்ணுகிறாராம் ஜெய்.

லிவ் இன்

லிவ் இன்

அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார் ஜெய். அப்படி என்றால் அவர் திருமணமாகாமலேயே ஒரே வீட்டில் வசிக்கிறார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

English summary
Actor Jai accepted director Venkat Prabhu's dosa challenge and found himself in trouble.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos