»   »  ஜெய்யின் அரசியல் ஆசைக்கு விடிவுகாலம் பிறந்தததா?

ஜெய்யின் அரசியல் ஆசைக்கு விடிவுகாலம் பிறந்தததா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் புகழ் திரைப்படம் வருகின்ற மார்ச் 18ல் வெளியாகும் என்று படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜெய், சுரபி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் புகழ். ‘உதயம் என்.எச்.4 புகழ் மணிமாறன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.


Jai's Puzhal Release Date

விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இப்படம் ஜெய்யின் 'வலியவன்' தோல்வியால் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் ஆக்ஷன் கலந்த காதல் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை வருகின்ற மார்ச் 18ல் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


உண்மை சம்பவங்களின் தொகுப்பாக மணிமாறன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யூ சான்றிதழ் அளித்துள்ளனர்.


Jai's Puzhal Release Date

இப்படத்தில் ஜெய் அரசியல்வாதியாக நடித்திருப்பதால் ஜெய்யின் அரசியல் ஆசைக்கு தற்போது விவுகாலம் பிறந்து விட்டது என்றே கூறலாம்.


கடைசியாக வெளியான ராஜா ராணி படத்திற்குப் பின் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் படங்கள் எதுவும் ஜெய் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Jai - Manimaran's Puzhal Release on March 18.The Official Announcement Can be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil