முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் ஜெய்... கார்த்திக் சுப்பராஜின் அடுத்த வெளியீடு!

சென்னை : ஜகமே தந்திரம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க கார்த்திக் சுப்பராஜ் ஜகமே தந்திரம் திரைப்படம் கட்டாயமாக திரையரங்குகளில் தான் வெளியாகும் என கூறியிருந்தார்.

இதனால் பெருமூச்சு விட்ட ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல்வேறு வெப்சீரிஸ்களை இயக்கியும் தயாரித்து வழங்கியும் வருகிறார்.

நடிகர் ஜெய் இதுவரை திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்போது முதன்முறையாக நடித்து வரும் வெப்சீரிஸை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட உள்ளார்.

மேக்கிங் ஸ்டைல்

மேக்கிங் ஸ்டைல்

தனித்துவமான மேக்கிங் ஸ்டைல் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்பொழுது பலராலும் விரும்பப்படும் கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார்.

ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

1990 களில் இருந்த துடிப்பான பழைய ரஜினியை மீண்டும் திரையில் பேட்ட திரைப்படத்தின் மூலம் கண்முன் கொண்டுவந்து காட்டிய கார்த்திக் சுப்பராஜ்-க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நிம்மதிப் பெருமூச்சு

நிம்மதிப் பெருமூச்சு

இப்போதுள்ள சூழ்நிலையில் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் ஒன்றாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதை தொடர்ந்து ஜகமே தந்திரம் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகிறது என பரவி வந்த தகவலையடுத்து, ஜகமே தந்திரம் கட்டாயமாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என கார்த்திக் சுப்புராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தது ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தது.

வெப்சீரிஸ்களை இயக்கியும்

வெப்சீரிஸ்களை இயக்கியும்

இவ்வாறு ஜகமே தந்திரம் வெளியீட்டு தேதி என்ன என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் தனது ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல்வேறு வெப்சீரிஸ்களை இயக்கியும் தயாரித்தும் வருகிறார்.

புத்தம் புது காலை

புத்தம் புது காலை

இந்த வகையில் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து அந்தோலஜி திரைப்படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்பராஜ் அதேசமயம், சமீபத்தில் ஓடிடியில் வெளியான "புத்தம் புது காலை" திரைப்படத்தில் ஒரு பாகத்தை இயக்கியிருந்தார்.

முதன்முறையாக வெப்சீரிஸிலும்

முதன்முறையாக வெப்சீரிஸிலும்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் ஜெய் இதற்கு முன் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் இப்போது முதன்முறையாக வெப்சீரிஸிலும் கலக்க உள்ளார்.

இணை இயக்குனர்களான

இணை இயக்குனர்களான

" ட்ரிபிள்ஸ்" என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப்சீரிஸை கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனர்களான சாருகேஷ் சேகர், பாலாஜி ஜெயராமன், கல்யாண் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். மேலும் இதை கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான "ஸ்டோன் பென்ச்" வெளியிடுகிறது.

கலகலப்பான காமெடி

கலகலப்பான காமெடி

ஜெய்க்கு 25வது திரைப்படமான "கேப்மாரி" திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களும் இதுவரை வெளியாகாத நிலையில் கலகலப்பான காமெடியுடன் உருவாகியுள்ள இந்த "ட்ரிபிள்ஸ்" வெப்சீரிஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகிறது. ஜெய் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றாத நிலையில் இப்பொழுது முதன்முறையாக இருவரும் இணைந்திருப்பதால் "ட்ரிபிள்ஸ்" வெப்சீரிஸின் மீது மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X