சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு: ஜெய் நடிக்கும் சரஸ்வதி சபதம் பெயர் மாற்றம்

By Mayura Akilan

சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பினை அடுத்து ஜெய் நடித்த திரைப்படம் நவீன சரஸ்வதி சபதமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் 'சரஸ்வதி சபதம்'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் தலைப்புக்கான பிரச்சினையும் தொடங்கிவிட்டது. மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'சரஸ்வதி சபதம்' பக்தி திரைப்படத்தின் தலைப்பில் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக விளம்பரத்தோடு புதிதாக 'சரஸ்வதி சபதம்' பெயரில் படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றங்கள் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பின் அவர்களுடோடு பேச்சுவார்த்தை நடித்தி சுமூகமாக பேசித் தீர்த்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு 'நவீன சரஸ்வதி சபதம்' என்று பெயரிட்டுள்ளனர்.

Jai's flick undergoes title change

முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சந்துரு இயக்குகிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு பிரேம்குமார் என்பவர் இசையமைக்கிறார். இவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது, எவரது மனத்தையும் புண்படுத்தாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X