"வலியவன்" ஜெய்க்கு ஆண்ட்ரியா ஜோடி!
சென்னை: இளம் ஹீரோக்களில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகின்ற நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் சரவணன் இயக்கத்தில் "வலியவன்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்தப் படத்தை வெகுவாக எதிர்பார்ப்பதாக கூறுகிறார் ஜெய்.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய இளம் இயக்குனரான சரவணன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.

ஆண்ட்ரியா ஹீரோயின்:
ஜெய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மியா ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஹீரோ மாறிப் போயாச்சு:
முதலில் இந்தப் படத்தின் நாயகனாக விக்ரம் நடிக்கப் போவதாக கூறப்பட்டது. மேலும், அஞ்சலிதான் இந்த படத்துக்கு ஹீரோயின் என்றும் வதந்திகள் கிளம்பின.

காதலும், ஆக்ஷனும்:
ஆனால் தற்போது அதைத் தாண்டி ஜெய், ஆண்ட்ரியா என்பது உறுதியாகியுள்ளது. இவன் வேற மாதிரி போலவே காதல், ஆக்ஷன் கலந்த படமாக உருவாகியுள்ளது.

இசையமைப்பும், ஒளிப்பதிவும்:
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு "சூதுகவ்வும்" பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வெற்றிக் கனி கிடைக்குமா?:
சுப்பிரமணியபுரம் வெற்றிக்குப் பிறகு அழுத்தமான, அதிரடியான வெற்றியை ஜெய் இதுவரை கொடுக்கவில்லை. அந்தக் குறையை வலியவன் தீர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











