வன்மம்... பகை... நரபலி... வீரபாண்டியபுரம் படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியீடு
சென்னை : நடிகர் ஜெய், மீனாட்சி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ள படம் வீரபாண்டியபுரம்.
முன்னதாக சிவ சிவா என்று இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்திற்கு அடுத்து தற்போது இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுக்க முடியவில்லை என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு கைக்கொடுக்கும் படங்களை கொடுத்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான கலகலப்பு 2 படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

வீரபாண்டியபுரம் படம்
இந்நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் வீரபாண்டியபுரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் மீனாட்சி. மேலும் சத்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துக்குமார், அருள் தாஸ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

முதல்முறையாக ஜெய் இசை
இந்தப் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் நடிகர் ஜெய். படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தை லென்டி ஸ்டூடியோஸ் சார்பில் ஐஸ்வர்யா தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

ஆடியோ ரிலீஸ் விழா
படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா தற்போது நடைபெற்றுள்ளது. இதில் சுசீந்திரன், ஜெய், மீனாட்சி, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன், படத்தின் கதையை கேட்ட ஜெய், சம்பளம் வாங்காமல் பார்ட்னர்ஷிப்பில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

ஜெய்க்கு வைரமுத்து பாராட்டு
படத்தில் ஜெய் இசையமைப்பில் ஒரு பாடலை எழுதியுள்ளார் வைரமுத்து. அவர் ஜெய்யின் இசையை கேட்டு, அவர் மிகப்பெரிய இசையமைப்பாளராக வருவார் என்று வாழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமத்து இசையை தனது முதல் படத்திலேயே அழகாக தந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.

பழிவாங்கும் ஆக்ஷன் கதை
நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு இந்தப் படத்தை பழிவாங்கும் ஆக்ஷன் கதையாக எடுத்துள்ளதாகவும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தான் யானை அல்ல குதிரை என்று தெரிவித்த சுசீந்திரன் தான் கண்டிப்பாக எழுந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

நம்பிக்கை கொடுத்த படம்
தொடர்ந்து பேசிய ஜெய், இந்தப் படத்தின் இசையமைப்பை முடித்தவுடன் தானும் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறினார். சுந்தர் சி படத்திலும் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுசீந்திரன் இல்லாத ஒரு நாளில் தான் படத்தை இயக்கியதாகவும் குறிப்பிட்டார்.

சிறப்பு காட்சிகள் வெளியீடு
இதனிடையே படத்தின் சிறப்பு காட்சிகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முக்கியமாக வன்மம், நரபலி என்ற வார்த்தைகளை கேட்க முடிகிறது. படத்தில் வன்முறை சற்று தூக்கலாகவே இருக்கும் என்பது இந்த காட்சிகளின் மூலம் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











