‘இவ்ளோ பெரிய ஹீல்ஸ்-ஆ போட்டுட்டு வர்றது’.. ராய் லட்சுமியால் சங்கடத்தில் நெளிந்த ஜெய்!
நீயா 2 பட செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: நீயா 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜெய், ராய் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
எல்.சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா ஆகியோர் நடித்துள்ள படம் நீயா 2. கடந்த 1979ம் ஆண்டு கமல்-ஸ்ரீபிரியா நடித்த நீயா படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருவதாத் தெரிகிறது.
இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

செய்தியாளர் சந்திப்பு:
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எல்.சுரேஷ், ஜெய், ராய் லட்சுமி, பாலசரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நீயா 2 பட அனுபவம் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

அசௌகரியம்:
விழாவின் இறுதியில் அனைவரும் சேர்ந்து மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது நாயகன் ஜெய்க்கு அருகில், நாயகி ராய் லட்சுமி நின்று போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். ஆனால், அதனை ஜெய் அசௌகரியமாக உணர்ந்தார்.

ஹைஹீல்ஸ்:
காரணம், ஏற்கனவே நன்கு உயரமான ராய் லட்சுமி, நிகழ்ச்சிக்கு மிக உயரமான ஹைஹீல்ஸ் காலணி அணிந்திருந்தார். இதனால், ஜெய்யை விட அவர் மிகவும் உயரமாக தெரிந்தார். ராய் லட்சுமியின் அருகில் மிகவும் குள்ளமாக தெரிந்தார் ஜெய். ஆனாலும், தனது சங்கடத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார் அவர்.

விரைவில் ரிலீஸ்:
நீண்ட காலத்திற்குப் பிறகு சமீபகாலமாகத் தான் ஜெய், இது போன்ற பட புரோமோசன் விழாக்களில் கலந்து கொள்கிறார். நீயா 2படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











