சிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்!
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படத்துக்கான டைட்டில் தெரிய வந்துள்ளது.
விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் இயக்குனராக, அறிமுகமானவர் சுசீந்திரன்.
இந்தப் படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இது ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

நான் மகான் அல்ல
இந்தப் படத்தை அடுத்து கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தை இயக்கினார். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. அடுத்து தேசிய விருது பெற்ற அழகர் சாமியின் குதிரை என்ற படத்தை இயக்கினார். அடுத்து விக்ரம் நடித்த ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், விஷால் நடித்த பாண்டிய நாடு உட்பட சில படங்களை இயக்கினார்.

ஒட்டன்சத்திரம்
இப்போது, சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்கினார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இதில், பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார்.

குற்றம் குற்றமே
இந்த படத்துக்கு இடையே, மற்றொரு படத்தையும் சுசீந்திரன் இயக்கி வந்தார். அதில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக, ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு டைட்டில் வைக்காமல் இருந்தனர். இப்போது குற்றமே குற்றம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மீண்டும் சிம்பு
ஜெய் நடிப்பில் இன்னொரு படத்தையும் சுசீந்திரன் இயக்கி உள்ளார். அதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜெய் அறிமுகமாகிறார். இதற்கு சிவ சிவா என்று டைட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து சிம்புவை மீண்டும் இயக்கவும் சுசீந்திரன் பேசி வருகிறார்.


Click it and Unblock the Notifications











