ஜெய் – ஸ்வாதி ஜோடி சேரும் வடகறி

By Mayura Akilan

சுப்ரமணியபுரம் சூப்பர் ஹிட் ஜோடி ஜெய் - ஸ்வாதி புதிய படம் ஒன்றில் மீண்டும் ஜோடி சேருகின்றனர். படத்தின் பெயர் வடகறி.

தற்போது ஜெய் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவுடன் நடித்து வருகிறார். இதேபோல் சுவாதியும் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் பிஸியாக உள்ளார்.

இதன்பிறகே இவ்விருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபலமான ஜெய்

பிரபலமான ஜெய்

சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் ஜெய், கோவா, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இப்போது திருமணம் என்னும் நிக்ஹாக் படம் பரபரப்பாக தயாராகிவருகிறது.

போராளியில் ஸ்வாதி

போராளியில் ஸ்வாதி

ஸ்வாதி, சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் போராளியில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் அமையவில்லை. தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் படத்தில் நடித்து வருகிறார்.

கண்கள் இரண்டால்….

கண்கள் இரண்டால்….

சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய் - ஸ்வாதி ஜோடி ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக கண்கள் இரண்டால் பாடல் சூப்பர் ஹிட் ஆக அவர்களின் கெமிஸ்ட்ரிதான் காரணம் என்ற பேச்சு இருந்தது. இப்போது 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஜோடி மீண்டும் வடகறி படத்தின் மூலம் இணைகின்றனர்.

தயாநிதி அழகிரி தயாரிப்பு

தயாநிதி அழகிரி தயாரிப்பு

சரவணராஜன் இயக்கும் வடகறி திரைப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கொலவெறி அனிருத் இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X