சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் எப்படி.. ஜெய்பீமா? கடைக்குட்டி சிங்கமா? ஒரு பார்வை!

சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளது.

சூரரைப் போற்று, ஜெய்பீம் என கடந்த இரு படங்களிலும் கமர்ஷியல் ஃபார்முலாவை விட்டு விலகியிருந்த நடிகர் சூர்யா மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்ப காரணம் என்ன? என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதங்களாக எழுந்துள்ளது.

இப்படியொரு விவாதம் எழும் என்பதை உணர்ந்து தான் சமூக கருத்தையும் ஆண் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துக்களையும் எதற்கும் துணிந்தவன் படத்தில் வைத்துள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஜெய்பீமா? அல்லது பாண்டிராஜின் கடைக்குட்டி சிங்கமா? என ஒரு சிறிய அலசலை இங்கே பார்ப்போம்.

தம்பியின் கடைக்குட்டி சிங்கம்

தம்பியின் கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சத்தியராஜ் அப்பாவாக நடிக்க கார்த்தி ஹீரோவாக நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் விவசாயத்தையும், பெண் குழந்தை முக்கியத்துவத்தையும் ஹைலைட் படுத்தி இருந்தது. ஆண் குழந்தை வேண்டும் என அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்ததும் இதுவே போதும் என கார்த்தி சொல்லும் வகையில் அந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யாவின் ஜெய்பீம்

சூர்யா தயாரித்து நடிக்க இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர்கள் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படும் அவலங்களும் நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்த காலத்தில் எடுத்து நடத்திய வழக்கையும் மையமாக வைத்து முழுக்க முழுக்க கதையம்சம் கொண்ட ஏழை மக்களின் குரலாக அந்த படம் அமைந்திருந்தது. ஆஸ்கர் போட்டி வரை சென்ற அந்த படம் இறுதி நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், ஆஸ்கர் குழுவினர் பலரின் மனங்களை கவர்ந்தது.

கடைக்குட்டியா? ஜெய்பீமா?

கடைக்குட்டியா? ஜெய்பீமா?

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பாண்டிராஜ் பாணியில் கடைக்குட்டி சிங்கமாக வந்திருக்கிறதா? அல்லது சூர்யாவின் ஜெய்பீம் ரேஞ்சுக்கு வந்திருக்கிறதா? என்கிற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. கடைக்குட்டி சிங்கம் பாதி ஜெய்பீம் பாதி கலந்து செய்த கலவையாகவே எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இருப்பது என்பது தான் உண்மை.

எம்ஜிஆர் ஸ்டைல்

எம்ஜிஆர் ஸ்டைல்

வெகுஜன மக்களையும் கவர்ந்து, சமூக கருத்துக்களையும் சரியான அளவில் உட்புகுத்தி எடுக்கும் அதே எம்ஜிஆர் ஸ்டைல் படமாகவே எதற்கும் துணிந்தவன் படம் இருப்பது படத்தின் வசூலுக்கு பிளஸ் என்றே சொல்கின்றனர். வலிமை திரைப்படம் தியேட்டர்களை மீண்டும் திறந்து விட்டுள்ள நிலையில், எதற்கும் துணிந்தவன் படம் ரசிகர்களை விடாமல் தியேட்டர் பக்கம் வரவழைக்குமா? என்பது முதல் வார இறுதியில் தெரிந்து விடும்.

என்ஜிகே இப்போ வந்திருந்தால்

என்ஜிகே இப்போ வந்திருந்தால்

கமர்ஷியல் படங்களில் இருந்து சூர்யாவை திசை திருப்பியதே செல்வராகவனின் என்ஜிகே திரைப்படம் தான் என்றும், சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களுக்கு பிறகு அந்த படம் இப்போது திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சோதனை முயற்சியா

சோதனை முயற்சியா

மீண்டும் வேட்டிக் கட்டி கிராமத்து பின்னணியில் எதிரிகளை பறக்கவிடும் சண்டைக் காட்சிகளுடன் சூர்யா நடித்திருப்பது கமர்ஷியல் பக்கம் சென்றாலும், எந்த பிரச்சனையும் தனக்கும் தனது படத்திற்கும் வருகிறதா? இல்லையா? என்பதை சோதிக்கும் முயற்சியாகவே எதற்கும் துணிந்தவன் இருப்பதாகவும் அலசி வருகின்றனர்.

பாலா படம்

பாலா படம்

ஒரு கமர்ஷியல், ஒரு கன்டென்ட் படம் என கமல் ஸ்டைலுக்கும் சூர்யா நகர்கிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்ததாக இயக்குநர் பாலா இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக சூர்யா நடிக்க உள்ள படம் முழுக்க முழுக்க கன்டென்ட் படமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிப்பின் நாயகனிடம் இருந்து ரசிகர்கள் அதையே எதிர்பார்க்கின்றனர் என்பது நிதர்சனம்.

Recommended Video

Etharkkum Thunindhavan Audience Opinion | Suriya | Pandiraj | D Imman | Tamil Filmibeat
வாடிவாசல்

வாடிவாசல்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே அந்த படம் எப்போது தொடங்கும் என்கிற கேள்வி தான் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும், வாடிவாசல் திரைப்படமும் மாஸ் மசாலா படமாக இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X