twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...அமெரிக்காவில் கமலை கைது செய்து வைத்திருந்தார்களா?...இது எப்போ நடந்தது?

    |

    சென்னை : அமெரிக்காவில் தன்னையும் கமலையும் போலீசார் காரில் கைது செய்து வைத்திருந்தனர் என பிரபல நடிகர் ஒருவர் கூறி உள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது எப்போ நடந்தது...இந்த தகவல் வெளியே வந்தது போலவே தெரியவில்லையே என கேட்டு வருகின்றனர்.

    நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத் தற்போது Bloody Brothers என்ற வெப் ஷோவில் நடித்து முடித்துள்ளார். டார்க் காமெடி த்ரில்லர் படமான இதில் ஜீஷன் ஆயுப்புடன் இணைந்து நடித்துள்ளார் ஜெய்தீப். விரைவில் இந்த வெப் ஷோ வெளியிடப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளில் ஜெய்தீப் பிஸியாக இருக்கிறார். அப்படி ப்ரொமோஷனின் போது இந்துஸ்தான் டைம்ஸிற்கு, அளித்த பேட்டியில் பல அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

    கமல் கைது செய்யப்பட்டாரா

    கமல் கைது செய்யப்பட்டாரா

    தனது வாழ்க்கை பற்றி எப்போது பயந்தேன் என ஜெய்தீப் வெளிப்படையாக பேசி உள்ளார். அப்போது அமெரிக்காவில் கமல்ஹாசனுடன் சேர்த்து தன்னை கைது செய்து வைத்திருந்த போது தான் தான் மிவும் பயந்து விட்டதாக அவர் கூறி உள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் புதிதாக இருப்பதுடன், ஆச்சரித்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

    விஸ்வரூபம் ஷுட்டிங்

    விஸ்வரூபம் ஷுட்டிங்

    ஜெய்தீப் தனது பேட்டியில் கூறுகையில், இது விஸ்வரூபம் பட ஷுட்டிங்கின் போது நடந்தது. நியூயார்க்கின் Manhattan நகரில் கமல் சாருடன் ஷுட்டிங் நடத்தப்பட்டது. 2013 ம் ஆண்டு அது கிறிஸ்துமஸ் சமயம். பண்டிகை காலம் என்பதால் அமெரிக்கா முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் பெரிய SUV கார்களில் பாலத்தின் மீது செல்லும் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தோம். மூன்று பெரிய SUV கள் பாலத்தின் மீது செல்லும் காட்சி.

     சுற்றி வளைத்த போலீசார்

    சுற்றி வளைத்த போலீசார்

    ஒரு காரில் என்னுடன் கமல் சாரும் இருந்தார். நாங்கள் அந்த காட்சியை முடிக்காமலேயே சுற்றி, திரும்பி வந்து விட்டோம். மீண்டும் அந்த காட்சியை எடுக்க ஒரு டோல்கேட்டை கடந்து வந்து மீண்டும் அந்த பாலத்தின் மீது ஏற வேண்டும். மூன்றாவது முறை அந்த டோல்கேட்டை அடைந்த போது எட்டு முதல் 10 போலீஸ் கார்கள் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டது. கையில் துப்பாக்கியுடன் வந்த அவர்களை பார்த்து கைகளை மேலே தூக்கியப்படி, தயவு செய்து எங்களை சுட வேண்டாம் என கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தோம்.

    காரில் பிடித்து வைக்கப்பட்ட கமல்

    காரில் பிடித்து வைக்கப்பட்ட கமல்

    நாங்கள் ஷுட்டிங் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என நீண்ட போராட்டத்திற்கு பிறகே அவர்களுக்கு புரிய வைத்தோம். அந்த அதிர்ச்சி, பதற்றமான சூழலில் இருந்து நாங்கள் வெளியே வர வெகு நேரம் ஆகி விட்டது. அவர்கள் எங்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பிறகு அது மறக்க முடியாத சம்பவம் ஆகி விட்டது என்றார்.

    ஒரே நாளில் பெரிய ஆளாகியிருப்பேன்

    ஒரே நாளில் பெரிய ஆளாகியிருப்பேன்

    மேலும் அவர் கூறுகையில், இது உங்களுக்கு வித்தியாசமாக கூட இருக்கலாம். ஆனால் எனக்கு அன்று தோன்றியது, ஒருவேளை கமலல்ஹாசனுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டால் நான் மிகப் பெரிய ஆள் ஆகி விடுவேன். பெரிதாக ஜெயித்ததை போல் உணர்வேன் என நினைத்தேன். அப்போது வரை பெரியதாக நான் ஏதும் செய்யவில்லை. ஆனால் கமல்ஹாசனுடன் சேர்ந்து அமெரிக்காவில் நான் கைது செய்யப்பட்டிருந்தால் திடீரென ஜெய்தீப் அஹ்லாவத் பெரிய ஆள் ஆகி இருப்பேன் என்றார்.

    English summary
    Actor Jaideep Ahlawat shared Vishwaroopam shooting experience in USA. He told in his recent interview, he and Kamal were almost arrested in car. Then they explained they are in shooting. Newyork police warned their.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X