ஜெயில் ஆல்பமை வெளியிட்டார் இயக்குனர் மணிரத்னம்!
சென்னை : இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது ஹீரோவாக கலக்கி கொண்டுள்ளார் ஜி வி பிரகாஷ் குமார்.
அங்காடித் தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில்.
ஜெயிலில் நடக்கின்ற பல முக்கியமான சம்பவங்களை தத்ரூபமாக மையப்படுத்தி உருவாகியுள்ள ஜெயில் திரைப்படத்தின் ஆல்பமை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

வடசென்னை பையனாக நடித்துள்ளார்
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் குமார் இசை அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் வருகிறார் . அந்த அளவிற்கு இவரது இசை ஒவ்வொரு படத்திற்கும் மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறது. இசையமைப்பாளராக இருந்துகொண்டே இப்பொழுது நடிகராகவும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். இதுவரை சிட்டி பாயாக கலக்கிக் கொண்டிருந்த
ஜி வி பிரகாஷ்குமார் இப்போது இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் திரைப்படத்தில் வடசென்னை பையனாக நடித்துள்ளார்.

ஜெயிலில் நடக்கும் பல உண்மை சம்பவங்களை
வெயில்,அங்காடித்தெரு, அரவான், காவிய தலைவன் என தனது ஒவ்வொரு படைப்புகளிலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வரும் இயக்குனர் வசந்தபாலன் இப்பொழுது ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்கிவரும் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது வெளியாக தயாராக உள்ள ஜெயில் திரைப்படமும் ஜெயிலில் நடக்கும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது

அபர்ணதி கதாநாயகியாக
முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சென்ற ஆண்டே வெளியாக இருந்த ஜெயில் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் வெளியிட முடியாமல் இருந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஜெயில் ஆல்பமை மணிரத்னம் வெளியிட்டுள்ளார்
அதன்படி ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்தில் ஹீரோவாக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஜெயில் படத்திற்கு மிகச் சிறந்த இசையை ஜிவி பிரகாஷ்குமார் கொடுத்துள்ள நிலையில் அனைத்து பாடல்களும் அடங்கிய ஆல்பமை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட டிசம்பர் 9ம் தேதி படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











