காத்தோடு காத்தானேன்… 18 மில்லியன் இதயங்களை காதலோடு சுவாசிக்க வைத்துள்ளது… வசந்தபாலன் மகிழ்ச்சி !
சென்னை : காத்தோடு காத்தானேன் 18மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இதனை இயக்குனர் வசந்த பாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இப்பாடலை வெற்றிப்பாடலாக்கிய 18 மில்லியன் இதயங்களுக்கும், ஜிவி பிரகாஷ் மற்றும் பாடலாசிரியர் கபிலன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெயில்
ஆல்பம், வெயில், அங்காடிதெரு, அரவான், காவித்தலைவன் ஆகிய படங்களை இயக்கியவர் வசந்த்பாலன் தற்போது ஜெயில் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம ஸ்ரீதரன் மரியாதசன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

பல முன்னணி நடிகரகள்
இத்திரைப்படத்தில், ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத் குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், பிரேம்ஜி அமரன், அபர்நதி, பிரகாஷ் ராஜ், சூரி, ஆனந்த் பாபு, பாபி சிம்ஹா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். அபர்நதி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆர்யா தொகுத்து வழங்கிய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர்.

அதிதீ ராவ், தனுஷ்
இத்திரைப்பத்தின் முதல் பாடலான "காத்தோடு காத்தானேன்" என்ற பாடல் கடந்த ஆண்டு வெளியானது . இப்பாடலை அதிதீ ராவ் மற்றும் தனுஷ் பாடியிருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்தும் இருக்கிறார். இப்பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த பாடலாக உள்ளது.

18 மில்லியன் பார்வையாளர்கள்
இந்நிலையில் வசந்த பாலன் தனது ட்விட்டர் பக்கத்தில், காத்தோடு காத்தானேன் பாடல் 18 மில்லியன் இதயங்களை காதலோடு சுவாசிக்க வைத்துள்ளது. இதயத்தில் நுழைந்த காற்று விரைவில் திரையில் சுழன்றடிக்கும். காதல் நுழையாத தாழ் உண்டா? 18 மில்லியன் இதயங்களுக்கும் நன்றி gvpraksh Kavikabilan என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











