ஜெயில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு!

சென்னை: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஜெயில்.

Recommended Video

Jail | G.V. Prakash | Vasanthabalan ஈரானிய படங்களுக்கு நிகராக படம் பண்ணுபவர் | Filmibeat Tamil

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த ஜெயில் திரைப்படம் இப்பொழுது ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகியுள்ளது

டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது

 வசந்தபாலன் இயக்கத்தில்

வசந்தபாலன் இயக்கத்தில்

இயக்குனர் வசந்தபாலனின் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களையும் ரசிகர்களின் மனதை தொடும் வகையில் இயக்கி வரும் வசந்த பாலன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இது வரை ஜெயில் குறித்த பல திரைப் படங்கள் வந்திருந்தாலும் இந்த திரைப்படம் அனைத்திலிருந்தும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்து வருகிறது.

 சீரியஸான வடசன்னை பயனாக

சீரியஸான வடசன்னை பயனாக

ஜிவி பிரகாஷ்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்க அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இதுவரை பல படங்களில் கலகலப்பான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ஜெயில் படத்தில் மிகவும் சீரியஸான வடசன்னை பயனாக நடிப்பில் மிரட்டியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. குப்பத்து ஜனங்களை சந்தேகத்தின் பெயரில் கூட்டிச்செல்லும் காவல்துறையினர் அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு எவ்வாறெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதைப் பற்றி பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

 ரிலீஸ் தேதி தள்ளிப் போனது

ரிலீஸ் தேதி தள்ளிப் போனது

ஜிவி பிரகாஷுக்கு அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரைகீஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராக இருந்த ஜெயில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியாமல் படக்குழு இருக்க தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது

 நகரோடி மேக்கிங் வீடியோ

நகரோடி மேக்கிங் வீடியோ

இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி திரைப்படம் கட்டாயமாக வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இருப்பினும் இந்த திரைப்படம் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது என செய்திகள் வெளிவந்தது ஆனால் படக்குழு திட்டவட்டமாக குறித்த தேதியில் டிசம்பர் 9ஆம் தேதி ஜெயில் கட்டாயமாக வெளியாகும் எனக் கூறியதை அடுத்து படத்தை காண ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். இந்நிலையில் ஜெயில் படத்தின் நகரோடி பாடல் மேக்கிங் வீடியோவை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் விருதுகளை அள்ளியது போல ஜெயில் திரைப்படமும் பல விருதுகளை வென்று குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X