தடைகளை தாண்டி கெத்தாக வெளியாகும் ஜெயில்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை : இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ஜெயில்

கடந்த 2019ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாராக இருந்தது ஆனால் பல்வேறு தடைகளால் வெளியிட முடியாமல் போனது

இந்த நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து வரும் 9-ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயில் படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அழுத்தமான கதைகளை

அழுத்தமான கதைகளை

பொதுவாக இயக்குனர் வசந்தபாலன் திரைப்படங்கள் என்றாலே அது அழுத்தமான கதைக்களமாக இருக்கும். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வசந்தபாலன் ஷங்கர் ஸ்டைலுக்கு அப்படியே நேரெதிராக அழுத்தமான கதைகளை இயக்கிய தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக உள்ளார் . முதல் படமே இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

ஜெயில்

ஜெயில்

வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்று வர இப்போது ஜெயில் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி உள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளம் நடிகை அபர்ணதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ராதிகா சரத்குமார்,ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

சுவாரஸ்யமான காட்சிகளை

சுவாரஸ்யமான காட்சிகளை

ஜெயில் டீசர் வெளியானது முதலே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வசந்தபாலன் எந்த படத்தை இயக்கினாலும் அதைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து நினைத்துக்கூட பார்க்க முடியாத காட்சிகளை சேர்த்திருப்பார். அந்த வகையில் ஜெயில் திரைப்படமும் பல சுவாரஸ்யமான காட்சிகளை கொண்டு தயாராகி உள்ளது.கிரைகீஸ் சினி கிரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் . மேலும் இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தடைகளை தாண்டி கெத்தாக

தடைகளை தாண்டி கெத்தாக

கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயில் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படம் தொடர்ந்து வெளியாகாமல் போனது. பல்வேறு தேதி அறிவிக்கப்பட்டும் குறித்த தேதியில் வெளியிட முடியாமல் படக்குழு திணறியது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசித் தீர்க்கப்பட்டு டிசம்பர் 9ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஜெயில் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X