ஜெயில் பட டீசரை வெளியிடும் தேசிய விருது நடிகர்... கொண்டாட்டத்தில் படக்குழு!

சென்னை : நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில்.

நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருந்த இந்தப் படத்தை தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசரை நாளைய தினம் தேசிய விருது பெற்ற நடிகர் வெளியிட உள்ளார்.

ஜெயில் படம்

ஜெயில் படம்

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜிவிக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணிதி. ராதிகா சரத்குமார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீதரண் மாரிதாசன் படத்தை தயாரித்துள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்

படத்தின் சூட்டிங் நிறைவுபெற்று நீண்ட நாட்களாக ரிலீசுக்காக இந்தப் படம் காத்திருந்தது. இந்நிலையில் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா கைப்பற்றியுள்ளார்.

 விளம்பரப் பணிகள் துவக்கம்

விளம்பரப் பணிகள் துவக்கம்

முன்னதாக டார்லிங் மற்றும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய ஜிவியின் இரண்டு படங்களை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட நிலையில் தற்போது ஜெயில் படத்தை கைப்பற்றியுள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

நாளை டீசர் வெளியீடு

நாளை டீசர் வெளியீடு

இதனிடையே நாளைய தினம் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணியளவில் படத்தின் டீசரை தேசிய விருது நாயகன் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளதாக படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தனுஷ் குறித்து பாராட்டு

தனுஷ் குறித்து பாராட்டு

தமிழ் சினிமாவின் பெருமை தனுஷ் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஆயினும் தன்னுடைய இசையமைப்பையும் விடாமல் தொடர்ந்து வருகிறார்.

சிறப்பான பாடல்

சிறப்பான பாடல்

தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். ஜெயில் படத்தில் காத்தோடு காத்தானேன் என்ற பாடல் தனுஷ் குரலில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தன்னை தொடர்ந்து பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் ஜிவி. இந்நிலையில் அவரது நடிப்பில் பேச்சிலர் படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X