Jailer 2: ஜெயிலரை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இணைந்த நடிகை..? ரஜினி, நெல்சன் கூட்டணி கம்பேக்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜெயிலர் 2ம் பாகம் பற்றி தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2-இல் இணைந்த பிரபலம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ஜெயிலர் திரைப்படம் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். டாக்டர் படத்தை சூப்பர் ஹிட்டாக்கிய நெல்சன், விஜய்யின் பீஸ்ட் படத்தை சொதப்பி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அப்போது தான் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நெல்சன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. பீஸ்ட் தோல்வியால் ஜெயிலரில் இருந்து நெல்சன் வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து ஜெயிலர் இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் சூப்பர் ஸ்டார். ரஜினியின் நம்பிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது. அதன்படி ஜெயிலரில் ரஜினியுடன் வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். முக்கியமாக மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் மாஸ் காட்டியிருந்தனர். அதேபோல் அனிருத்தின் இசையும் ஜெயிலர் படத்துக்கு கை கொடுத்தது.
இப்படி ஒருவழியாக ரஜினியின் ஃபேன் பாய் சம்பவமாக உருவான ஜெயிலர், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால் ரஜினி, நெல்சன், அனிருத் மூவருக்கும் சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் கலாநிதி மாறன். அப்போதே ஜெயிலர் 2ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அதே ரஜினி, நெல்சன், அனிருத் காம்போவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், ரஜினியோ தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்திற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த கேப்பில் ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட்டை ரெடி செய்துவிட படக்குழு தரப்பில் இருந்து நெல்சனுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமான நெல்சன், ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் வேலைகளை தொடங்கிவிட்டதாக சொல்லப்பட்டது.
ஆனாலும் அதுபற்றி அபிஸியலாக எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் ஒர்க் பற்றி நடிகை மிர்னா மேனன் அப்டேட் கொடுத்துள்ளார். ஜெயிலர் முதல் பாகத்தில் வசந்த் ரவியின் மனைவியாகவும் ரஜினிக்கு மருமகளாகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் மிர்னா மேனன். முதல் பாகத்தில் வசந்த் ரவியை ரஜினி கொலை செய்துவிடுவதாக க்ளைமேக்ஸ் இருந்தது. ஆனால் மிர்னா மேனன் கேரக்டருக்கு முடிவு கொடுக்கவில்லை.
இதனால் அவரது கேரக்டர் ஜெயிலர் 2வில் இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல் அவரது கால்ஷீட்டையும் நெல்சன் வாங்கியுள்ளாராம். இதுபற்றி சமீபத்திய பேட்டியொன்றில் கூறிய மிர்னா மேனன், ஜெயிலர் 2 ஸ்க்ரிப்ட் வேலைகளில் நெல்சன் பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு தானும் ஜெயிலர் 2வில் நடிக்கவுள்ளதாக கூறியது ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. தலைவர் 171 முடிந்ததும் ஜெயிலர் 2 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











