தலைவர் அடுத்ததுக்கே போய்ட்டாரு.. ஒரே கப்சிப்.. ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போ? அரசியல் காரணங்கள் ஏதாவது இருக்கா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்க, அஸ்வத் மாரிமுத்து இயக்க, அனிருத் இசையில் உருவாகவுள்ள படம் தர்மன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை அதாவது ஜூன் 25ஆம் தேதியே தொடங்க உள்ளது என்று படக்குழு அறிவித்துவிட்டது. தர்மன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துவிட்டது. இப்படி இருக்கையில் இணையவாசிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை முன் வைத்து வருவது மட்டும் இல்லாமல், கூடுதலாக சில கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், படம் இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே வெளியாகும் என்ற ஆவல் பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் முதல் பாதியின் கடைசி மாதமான ஜூன் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் இன்னும் இரு நாட்களில் வரவுள்ளதால் படம் இந்த மாதத்தில் ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

இப்படி இருக்கையில் ஜெயிலர் படம் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் உள்ளது. ஜெயிலர் கொடுத்த ஹிட் சூப்பர் ஸ்டாருக்கு கூலி படத்திற்கும் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கையில் கடந்த ஆண்டு கூலி படம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.
அடுத்த படம்: இப்படி இருக்கையில் ரஜினிகாந்த் தனது அடுத்த படமான தர்மன் படத்திற்கு ஒன்றுக்கு மூன்று இயக்குநர்களை முடிவு செய்து அவர்களுடன் பணியாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கிறது என்பதால் நான்காவதாக அஸ்வத் மாரிமுத்துவை நியமனம் செய்து படப்பிடிப்பையே தொடங்கவுள்ளார்.

அரசியல் காரணங்கள்: இப்படி இருக்கையில் ஜெயிலர் 2 படம் எப்போது ரிலீஸ் ஆகும்? தற்போது தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருவதால் அரசியல் காரணங்கள் ஏதாவதால் படம் வெளியாவதில் சிக்கல் இருக்கிறதா என்று கூட சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் சிலரோ, அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்புகள் இல்லை, படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது, விரைவில் படம் வெளியாகும் என்றும் பதில் அளித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications