ஜெயிலர் 2 லீக்.. படக்குழுவின் அதிரடி நடவடிக்கை.. ஜனநாயகன் லீக் அதிர்ச்சி அடங்குவதற்குள் இதுவா?

சென்னை: ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகிவருகிறது ஜெயிலர் 2. இவர்கள் இணைந்த இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதிலும் முதல் பாகத்தை போலவே பல மொழிகளிலிருந்து ஸ்டார்கள் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் லீக்காகியிருப்பது தொடர்பாக படக்குழு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

பாபா படம் தோல்வியடைந்தபோது எந்த மாதிரியான பேச்சுக்களை சந்தித்தாரோ அதே அளவுக்கான பேச்சுக்களை தர்பார், அண்ணாத்த ஆகிய படங்களின்போதும் சந்தித்தார் ரஜினிகாந்த். ஒருகட்டத்தில் அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலியே விவாத பொருளானது. ஒருபக்கம் விஜய் ரசிகர்களோ, இனிமேல் விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கொக்கரித்தார்கள். மறுபக்கம் திரை ஆர்வலர்களோ, ரஜினியால் இனி எழவே முடியாது என கணித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார்.

Jailer 2 Shooting Video Leak Rajinikanth Film Team Issues Strong Warning to Fans amp amp Media
Photo Credit:

படம் மெகா ப்ளாக் பஸ்டர்: ஏற்கனவே பீஸ்ட் படத்தை இயக்கி மோசமான நிலைமையில் இருந்த நெல்சனை நம்பி ரஜினி சென்றதையும் விமர்சித்தார்கள். ஆனால் அவரோ அதீத நம்பிக்கை வைத்து நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மற்ற நடிகர்களையும் சரியாக பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தியிருந்தார் இயக்குநர். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி விமர்சித்தவர்களின் வாயை பதம் பார்த்தது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை படம் வசூலித்ததாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

Also Read
தண்ணீரில் வைத்து பூஜா ஹெக்டேவை தூக்கும் ஹீரோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி செய்றாரு?.. வைரலாகும் வீடியோ
தண்ணீரில் வைத்து பூஜா ஹெக்டேவை தூக்கும் ஹீரோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படி செய்றாரு?.. வைரலாகும் வீடியோ

ஜெயிலர் 2: மேலும் ஜெயிலர் 2வுக்கான பணிகளையும் அப்போதே தொடங்கியது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியும் இடையே வேட்டையன், கூலியை முடித்துவிட்டு ஜெயிலர் 2வில் இணைந்தார். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் லீக்கான அதிர்ச்சியே அடங்காத நிலையில்; ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவும் லீக்காகியிருக்கிறது. அதுகுறித்து படக்குழு தரப்பில் எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

படக்குழுவின் எச்சரிக்கை: அந்த அறிக்கையில், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவிவருவது குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். எங்கள் ஆன்டி-பைரசி குழு இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்துவருகிறது. இதுபோன்றவைகளை நீக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மேலும் இந்த வீடியோவை பகிர்பவர்கள் மீதும், அந்த சோஷியல் மீடியா கணக்குகளின் மீதும் சட்ட நடிவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாங்கள் பொறுப்பில்லை: மீடியா நண்பர்களும், ரசிகர்களும் இந்த வீடியோவை ஷேர் செய்யாமல் இருக்க கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால் உங்கள் சமூக வலைதள கணக்குகளும் முடக்கம் செய்யப்படும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு நிறுவான்ம் பொறுப்பாகாது. உங்கள் புரிதலுக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X