Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2... கேமியோ ரோலில் விஜய்... ஜோடியாக நயன்..? நெல்சா வேற மாறி வேற மாறி !

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்தார் நெல்சன். அதன்படி ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜெயிலர் 2 பற்றிய சில தரமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

ரஜினியின் ஜெயிலர் 2 மாஸ் அப்டேட்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் வேட்டையன், ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். அதேநேரம் சூப்பர் ஸ்டாரின் தலைவர் 172 படம் பற்றியும் தகவல்கள் வெளியாகிவிட்டன.

 Jailer 2: Vijay In A Powerful Cameo Role with Rajini for The Jailer 2

அதன்படி, தலைவர் 172 படத்தை நெல்சன் இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்தாண்டு ரஜினி, நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தது. அதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ரெடியாகிவிட்டாராம் நெல்சன். அதோடு ஜெயிலர் 2 ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளும் தொடங்கிவிட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் 2 ஷூட்டிங் 2025 ஜூன் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

அதேபோல், இந்தப் படத்தை 2026 பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இவர்கள் என்ட்ரியான ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமெண்ட்டாக அமைந்தது. அதேபோல் இரண்டாவது பாகத்தில் இக்கூட்டணி களமிறங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதை விடவும் செம்ம மாஸ் சர்ப்ரைஸ் கொடுக்க நெல்சன் பிளான் செய்துள்ளாராம். அதன்படி ஜெயிலர் 2ம் பாகத்தில் தளபதி விஜய் ஒரு பவர்ஃபுல் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தையை நெல்சன் தொடங்கியுள்ளாராம். விஜய்யின் பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியிருந்ததால் அவரால் தளபதியை கண்டிப்பாக சுப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறாராம்.

அதேபோல் ஜெயிலர் 2ம் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் முதல் பாகத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்த நிலையில், தற்போது அவருக்குப் பதிலாக நயன் இணையலாம் என தெரிகிறது. அதேபோல், ரஜினிக்கு வில்லனாக நடிக்க டோலிவுட்டில் இருந்து ஒரு முன்னணி ஹீரோவை நடிக்க வைக்க உள்ளாராம் நெல்சன்.

இதனால் ஜெயிலர் 2 டீம் செம்ம வெயிட்டாகிக் கொண்டே போகிறது. அதேநேரம் ரஜினியுடன் விஜய் எப்படியாவது நடித்து விட வேண்டும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயிலர் 2ம் பாகம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகுமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X