Jailer: கன்னட நடிகர், இந்தி பொண்ணு, தெலுங்குப் பாட்டு... ஜெயிலருக்காக சீமானிடம் முறையிட்ட தம்பிகள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை வெளியானது.

அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழும் தெலுங்கும் கலந்து உருவாகியுள்ள இப்பாடலை நெட்டிசன்கள் பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.

அதில் உச்சபட்சமாக சீமானிடம் முறையிடும் முரட்டு மீம் ஒன்று வைரலாகி வருகிறது.

சீமானிடம் சென்ற ஜெயிலர் பஞ்சாயத்து: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் முதல் பாடல் நேற்று மாலை வெளியானது. அனிருத் இசையில் 'காவாலா' என்ற டைட்டிலில் இப்பாடல் உருவாகியுள்ளது. காவாலா பாடலில் தமன்னாவின் கிளாமரும், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் சேர்ந்து வேற லெவலில் வைப் கொடுத்துள்ளது. அதேநேரம் இந்தப் பாடலை நெட்டிசன்கள் பலர் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ பாடலாக இல்லாமல், தமன்னாவின் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து காவாலா பாடல் உருவாகியுள்ளதாக ரஜினியின் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தமன்னாவின் கிளாமருக்காக ஜெயிலர் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம் எனவும் கூறி வருகின்றனர். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினியை விடவும் தமன்னாவின் கிளாமர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக ட்ரோல்கள் பறக்கின்றன.

இந்நிலையில், இதென்ன பிரமாதம் என்பதாக ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து செம்ம பங்கமான மீம் வெளியாகி வைரலாகி வருகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் சமுத்திரகனி போலீஸ் ஸ்டேஷன் கால் பண்ணும் புகைப்படத்துடன் வெளியாகியுள்ள இந்த மீம்மில் சீமானை கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.

அதாவது "Hello சீமான் அண்ணே வீடா, அண்ணே Englishல "Jailer" ன்னு Title வச்சிகிட்டு, ஒரு கன்னட நடிகர், ஒரு இந்திக்கார பொண்ணு கூட தெலுங்கு பாட்டுக்கு ஆடிட்டு இருக்காரு. கேட்டா தமிழ்ப் படம்ன்னு சொல்றாங்க. கொஞ்சம் என்னான்னு கேளுங்கண்ணே" என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த மீம் செம்ம வைரலாகி வருகிறது.

 Jailer: A trending meme is that Rajinis Jailer is not a Tamil film

ரஜினியை கன்னட நடிகர் என்றும், தமன்னாவை இந்தி நடிகை எனவும் கலாய்த்துள்ள நெட்டிசன்கள், காவாலா பாடல் தெலுங்கில் இருப்பதாகவும், ஜெயிலர் என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்துவிட்டு அதனை தமிழ்ப் படம் என கூறுவதாகவும் கலாய்த்துள்ளனர். இதனை சீமானிடம் அவரது முரட்டுத் தம்பிகள் முறையிடுவதாக கிரியேட் செய்துள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 29ம் தேதி நடக்கவுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X