Jackie Shroff: ஜெயிலர் பட நடிகர் கிசுகிசுக்களிலேயே சிக்க வில்லையாம்.. என்ன காரணம் தெரியுமா?

மும்பை: ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தான் எந்தவொரு நடிகையுடனும் கிசுகிசுக்களிலேயே சிக்கவில்லை என்றும் அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

நம்பியார் முதல் டேனியல் பாலாஜி வரை பொதுவாகவே வில்லன்கள் என்றால் நல்ல மனம் கொண்ட நபர்களாகவே உள்ளனர். சினிமாவில் பலாத்கார காட்சியில் நடித்தாலும், நிஜத்தில் ஹீரோக்கள் சிக்கிய அளவில் கிசுகிசுக்களிலும் பலான மேட்டர்களிலும் வில்லன் நடிகர்கள் பெரும்பாலும் சிக்குவதே இல்லை.

அதே கதை தான், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்புக்கும் என அவரே அளித்துள்ள பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Jailer actor Jackie Shroff Reveals why he never struck in gossips with any actress

தமிழ் படங்களில் ஜாக்கி ஷெராஃப்:

பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான ஜாக்கி ஷெராஃப் உடன் ரஜினிகாந்த் இந்தி படத்தில் எல்லாம் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ஜாக்கி ஷெராஃப். இந்த படத்தில் அவர் தான் மெயின் வில்லன் என சொல்லப்படுகிறது.

முன்னதாக தியாகராஜன் குமாராஜாவின் ஆரண்ய காண்டம், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார்.

திஷா பதானியுடன் கிசுகிசு:

ஜாக்கி ஷெராஃப்பின் மகன் டைகர் ஷெராஃப்பும் கங்குவா படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை திஷா பதானியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஹெவியான கிசுகிசு ஓடியது.

ஆனால், சமீப காலமாக திஷா பதானி இன்னொரு மாடல் நடிகருடன் காதல் வலையில் விழுந்துள்ளதாக அவருடன் டேட்டிங் செல்லும் போட்டோக்கள் வெளியான நிலையில், டைகர் ஷெராஃப்பும் திஷாவும் பிரேக்கப் செய்து விட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Jailer actor Jackie Shroff Reveals why he never struck in gossips with any actress

எந்த நடிகையுடனும் கிசுகிசு இல்லை:

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த ஜாக்கி ஷெராஃப் பல்வேறு நடிகைகளுடன் நெருக்கமான நட்பை பாராட்டி வந்தார். ஆனாலும், அவரைப் பற்றிய எந்தவொரு கிசுகிசுவும் வரவில்லை என்றும் அவர் மனைவி ஒரு நாள் கூட தப்பாக நினைத்து ஒரு வார்த்தை கேள்விக் கூட கேட்டதில்லை என்று கூறியுள்ளார்.

என் மீது என் மனைவி வைத்த அந்த நம்பிக்கை தான் என்னைப் பற்றி எந்தவொரு கிசுகிசுவும் வராததற்கு காரணம் என நினைக்கிறேன். காஷ்மீரில் ஷூட்டிங்கில் இருந்தாலும் சவுத்தில் ஊட்டியில் ஷூட்டிங் இருந்தாலும், பல நாட்கள் வீட்டுக்கு வரவில்லை என்றாலும், எப்படியாவது வீட்டுக்கு வந்து விடுவார் என காத்திருந்த மனைவிக்காக நானும் ஷூட்டிங் முடிந்த உடனே ஓடோடி சென்று அவரை சந்திப்பேன். அந்த காதல் தான் இதற்கு காரணம் என பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X