Saravanan On Rajini - கடவுளின் மறு உருவம் ரஜினி.. நாளை நடப்பதை இன்றே கணிப்பார்.. மனம் திறந்த சரவணன்

சென்னை: Saravanan On Rajini (ரஜினி குறித்து சரவணன்) ரஜினிகாந்த் கடவுளின் மறு உருவம் என்று ஜெயிலர் படத்தில் நடித்த சரவணன் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ஜெயிலர் கடந்த மாதம் பத்தாம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களின் ஆவலை படமானது பூர்த்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியே நிறைந்திருக்கிறார் என்றும்; ரொம்ப நாள் கழித்து இப்படி ரஜினியை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்ததாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Jailer Actor Saravanan has said that Rajinikanth is the embodiment of God

நெல்சனுக்கு பாராட்டு: ரஜினிக்கு எவ்வளவு பாராட்டு தெரிவித்தார்களோ அதே அளவு நெல்சன் திலீப்குமாருக்கும் தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேக்கிங் எல்லாம் அபாரமாக இருக்கிறது என்றும்; ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து தானும் கம்பேக் செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். இதனால் நெல்சனும் ஹேப்பி அண்ணாச்சிதான்.

வசூல்: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலே படக்குழுவுக்கு திருப்தியைத்தான் தந்தது. அடுத்தடுத்து நாட்களில் படம் செய்த நல்லபடியாகவே வசூல் செய்துவந்தது. வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து 600 கோடி க்ளப்பில் ஜெயிலர் இணைந்துவிட்டதாகவும் அறிவித்திருக்கிறது.

கார் பரிசு: படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பதால் ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் காரையும், செக்கையும் பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன். சூழல் இப்படி இருக்க பட ரிலீஸின் ஒரு நாள் முன்பு இமயமலை சென்ற ரஜினிகாந்த் அங்கிருந்து ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் சென்று சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியதும் அது சர்ச்சையானதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

ஓபிஎஸ் சந்திப்பு: அந்த சந்திப்புக்கு பிறகு ரஜினிக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் எனவும்; அரசியல் நோக்கத்துடன் மட்டுமே அவர் சந்தித்ததாகவும் பேசினர். அதேபோல் சமீபத்தில் ஓபிஎஸ்ஸும் ரஜினியை சந்தித்தார்.

பாஜகவினரை ரஜினி சந்தித்து வந்ததை அடுத்து அவரை வைத்து பாஜகவின் ஆதரவை தன் பக்கம் திருப்ப ஓபிஎஸ் முயன்றதால்தான் அந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும் பேசப்படுகிறது. ஆனால் ரஜினியின் ரசிகர்களோ; அவருக்கு விருப்பம் இருக்கிறது போய் பார்த்தார். அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தில் நடித்த சரவணன் ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.

Jailer Actor Saravanan has said that Rajinikanth is the embodiment of God

சரவணன் பேட்டி: ரஜினியின் தீவிர ரசிகரான சரவணன் பேசுகையில், "ரஜினிகாந்த் ஒரு சித்தர் மாதிரி. அவருக்கு எல்லாமே தெரியும். இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர் அவர். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் ரஜினி கடவுளின் மறு உருவம். இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று ரஜினிக்கு முன்னரே தெரியும். அதனால்தான் இமயமலை சென்றார். அவரது வாக்கு பலிக்கும்.

அவருக்கு ஆளுநர் பதவி எல்லாம் வேண்டாம். நீண்ட ஆயுளோடு குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்தாலே போதும். ஓபிஎஸ்ஸும் ரஜினியும் சந்தித்து என்ன பேசினார்கள் என்றே நமக்கு தெரியாது. அதை பற்றியெல்லாம் நாம் பேச வேண்டாம். ரஜினிகாந்த்துடன் நடித்தது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம்" என்றார். ஜெயிலர் படத்தில் சரவணனும் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X