Jailer: “தலைவர் அவ்ளோ ஷார்ப்... அந்த சீன் தான் மாஸ்..” மனம் திறந்த ஜெயிலர் பிரபலம்!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் 10ம் தேதி வெளியானது.
நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் ஃபேன் பாய் சம்பவமாக கொண்டாடி வருகின்றனர்.
ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ரஜினியுடனே படம் முழுவதும் வரும் நடிகர் சுகந்தன், ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவத்தை தமிழ் பிலிமிபீட் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

தலைவர் அவ்ளோ ஷார்ப்பா கவனிப்பார்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் கடந்த வாரம் வெளியானது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. முழுக்க முழுக்க ரஜினியின் மாஸ் சீன்ஸ் உடன் ஃபேன்பாய் சம்பவமாக ஜெயிலர் உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் சம்பவம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாட்ஷா படத்தில் ரஜினியின் பின்னால் ஜனகராஜ் உட்பட மேலும் 4 பேர் பாடிகாட்டாக வலம் வருவார்கள். சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து அவர்களும் ஆக்ஷனில் மாஸ் காட்டியிருப்பார்கள். அப்படித்தான் ஜெயிலர் படத்திலும் தலைவருக்கு பாடிகாட்டாக சிலரை நடிக்க வைத்துள்ளார் நெல்சன். அவர்களில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் சுகந்தன். ஆரண்யகாண்டம் படத்தில் அறிமுகமான சுகந்தன், 2.O, தெறி, டாக்டர், பீஸ்ட் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜெயிலரில் ரஜினிக்கு பாடிகாட் கேரக்டரில் நடித்து இப்போது பிரபலமாகியுள்ள சுகந்தன், படப்பிடிப்பில் நடந்த பல சுவாரஸ்யங்களை ஷேர் செய்துள்ளார். ஜெயிலர் படத்திற்காக தான் முதன்முதலாக மொட்டை அடித்தேன் எனவும், நெல்சன் தான் தனக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், டாக்டர் படத்தில் கூட நான்கு நாட்கள் தான் நடித்தேன், ஆனால், ஜெயிலரில் படம் முழுவதும் ரஜினி சாருடன் நடித்தது மறக்கவே முடியாது என்றுள்ளார்.
அதேபோல், ஜெயிலரில் லேடி கெட்டப்பில் நடித்தது வித்தியாசமான அனுபவம் என்றும், படப்பிடிப்பின் போது ரஜினி சார் தன்னிடம் அன்பாக பழகியதையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். ஒரு காட்சியில் ரஜினி சார் சிகரெட் பற்ற வைத்தவிட்டு தீப்பெட்டியை தன்னிடம் தூக்கி வீசுவார். அந்தக் காட்சி படமாக்கும் போது ரஜினி சாரின் ஸ்டைலை பார்த்து மிரண்டுவிட்டதாகவும், அப்போது தான் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அந்த சீனை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது எனவும் சுகந்தன் கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பின்னால் பாடிக்காட்டாக நடித்த நால்வரில் நான் மட்டும் கழுத்தில் டாலர் அணிந்திருந்ததாகவும், ஒரு ஷாட்டில் அதனை தலைவர் ஷார்ப்பாக கவனித்துவிட்டதையும் கூறியுள்ளார். டாலர் இருந்தால் ஷார்ட் கன்டினியூட்டி இருக்காது என்பதை ரஜினி சார் சொன்னதும், தலைவர் இவ்ளோ ஷார்ப்பா என ஷாக்காகிவிட்டதாகவும் சுகந்தன் ஷேர் செய்துள்ளார்.
அதேபோல், தெறி படத்தில் விஜய்யுடன் நடித்ததும், அவர் தன்னை கட்டியணைத்து பாராட்டியதையும் மறக்கவே முடியாது என சுகந்தன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மாதிரி இருந்ததாகவும், ரஜினி, நெல்சன் உட்பட அனைவரும் ஜாலியாக வேலை பார்த்ததையும் சுகந்தன் கூறியுள்ளது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











