குழந்தைகளை வலுக்கட்டாயமாக தள்ளி சம்பாதிக்கிறார்கள்.. ஓபனாக பேசிய ஜெயிலர் பட நடிகர்
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் ஃபேமஸான நடிகராக வலம் வருபவர் விநாயகன். அங்கு மட்டுமின்றி தமிழிலும் நடித்திருக்கும் அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார். படத்தில் அவரது கேரக்டரும், நடிப்பும் பெரிதாக பேசப்பட்டன. சூழல் இப்படி இருக்க விநாயகனை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுபவர். இந்நிலையில் அவரது சமூக வலைதள போஸ்ட் ஒன்று ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால் நடித்த மாந்த்ரீகம் படத்தின் மூலம் அறிமுகமானவர் விநாயகன். 1995ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த விநாயகனுக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக மல்லுவுட்டில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
பிறமொழிகள்: முன்னதாக, மலையாளத்தில் தனது திறமையை நிரூபித்ததன் மூலம் ஹிந்தி மொழியிலும் அறிமுகமானார் விநாயகன். கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ் என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான அவர் அடுத்தததாக தெலுங்கு மொழியிலும் நடிக்க ஆரம்பித்தார். 2006ஆம் ஆண்டு வெளியான ஆஷத்யூடு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி அங்கும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

மனைவியுடன் பிரச்னை: விநாயகன் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்பவர். சமீபத்தில்கூட ஒரு பெண் பத்திரிகையாளரை அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதுமட்டுமின்றி பல பெண்களுடன் அவர் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் அதனால் அவருக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், "எனக்கும் எனது மனைவி பபிதாவுக்கும் இருந்த அனைத்து திருமண உறவுகளும், சட்ட உறவுகளும் முடிவுக்கு வருகின்றன" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் விநாயகன்: மலையாளம், ஹிந்தி, தெலுங்கில் நடித்த விநாயகன் தமிழில் திமிரு படத்தின் மூலம் இண்ட்ரோ ஆனார். விஷால் நடித்த அந்தப் படத்தில் அவரது அண்ணியான ஸ்ரேயா ரெட்டிக்கு துணை நிற்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளியாக நடித்த அவர் நடிப்பில் மட்டுமின்றி தனது வசன உச்சரிப்பின் மூலமும் கவனம் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், மரியான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.
ஜெயிலர் விநாயகன்: நீண்ட வருடங்கள் கழித்து தமிழில் அவர் ரீ என்ட்ரி கொடுத்த படம் என்றால் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கிய அந்தப் படத்தில் விநாயகனின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "குடிக்கு முழுமையாக யார் அடிமையாக இருக்கிறார்களோ, உடல் ரீதியாக ரொம்ப பலவீனப்பட்டு எழுந்த நிற்கவே பிறர் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார்களொ, அப்படிப்பட்டவர்கள் எல்லாம் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று பொதுவில் பேசுவது காமெடியாக இருக்கிறது.
அட்வைஸ் செய்கிறவர்கள் யோக்கியமா?: ஆல்கஹால், கஞ்சா, பெண் எல்லாமே போதைதான். சொந்தமாக நிற்க முடியாமல், டெக்னாலஜி பற்றி புரிதல் இல்லாமல் அறிவுரை சொல்கிறீர்களா? தங்களது குழந்தைகளை சினிமாவில் வலுக்கட்டாயமாக தள்ளி பணம் சம்பாதிப்பதே ஒருவித போதைக்கு அடிமையான விஷயம்தான். அட்வைஸ் செய்பவர்கள் முதலில் தாங்கள் யோக்கியமா என்பதை உணர வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











