Mirna: கிழிந்த ஜீன்ஸ்.. கிளுகிளுப்பான பார்வை.. ரஜினியின் ரீல் மருமகள் சும்மா தெறிக்க விடுறாங்களே!
சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினியின் ரீல் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா இன்ஸ்டாகிராமில் சன்டே அதுவுமா ரசிகர்களுக்கு செம சூப்பரான ட்ரீட் கொடுத்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

கேரளாவை சேர்ந்த மிர்னா மேனன் பட்டதாரி எனும் படத்தின் மூலம் 2016ல் சினிமாவில் அதிதி மேனன் எனும் பெயரில் அறிமுகமானார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை மிர்ணா மேனன் என மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் மருமகள்: மோகன்லால் உடன் பிக் பிரதர் படத்தில் நடித்த மிர்ணா மேனன் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருப்பார். சேலையில் ஹோம்லி கேர்ளாக ஜெயிலர் படத்தில் நடித்த மிர்ணா மேனன் இன்ஸ்டாகிராமில் அட்டகாசமாக மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு மாஸ் காட்டி வருகிறார்.

முட்டித் தெரிய கிழிந்த ஜீன்ஸ்: பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை, புர்கா மற்றும் ஜெயிலர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இளம் நடிகை மிர்ணா மேனன் ஞாயிறு அதுவுமாக சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார். முட்டித் தெரிய கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு கலக்கலாக கவர்ச்சி போஸ் கொடுத்து கிறங்க வைத்து வருகிறார்.

ரத்தம் சொட்டச் சொட்ட: ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ரம்யா கிருஷ்ணனும் மிர்ணாவும் ரத்தம் சொட்டச் சொட்ட டைனிங் டேபிள் அருகே அமர்ந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சமீபத்தில் லைக்குகளை அள்ளியிருந்தார் மிர்ணா.
அடுத்த படம்: பர்த் மார்க் எனும் புதிய படத்தில் நடிகை மிர்ணா மேனன் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 11 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள மிர்ணா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புதிய புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர் வட்டத்தை அதிகரித்து வருகிறார். மிர்ணாவின் அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள் அவர் போஸ்ட் போட்டதுமே லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவிக்க தொடங்கி விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











