அடடா என்ன அழகு.. பால்ல குளிப்பீங்களா? தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
சென்னை: நடிகை தமன்னா புடவையில் இருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா, 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் படங்களை தவிர்த்து விட்டு மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெயிலர்: நடிகை தமன்னா விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த தமன்னா தற்போது, ரஜினியின் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து அரண்மனை 4 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமின்றி இன்னும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் வர்மா மீது காதல்: படங்களில் பிஸியாக நடித்து வரும் தமன்னா, விஜய் வர்மாவை காதலிப்பதை உறுதிப்படுத்தினார். அதில், நான் அவருடன் சேர்ந்து நடித்தாலேயே அவர்மீது காதல் வரும் என்று நான் நினைக்கவில்லை. நான் எத்தனையோ நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
விரைவில் திருமணம்: எனக்கு விஜய் வர்மா மீது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில் தான் காதல் ஏற்பட்டது. நான் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நபர் அவர் தான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவர் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததால், அவருக்காக நானும் சில கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இவர்களின் திருமண தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
பால்ல குளிப்பீங்களா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு சினிமாவில் மீண்டும் பேக்டூ பாமுக்கு வந்துள்ள தமன்னா புடவையில் தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அடடா என்ன அழகு.. பால்ல குளிப்பீங்களா? என கேட்டு அவரை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











