Jailer: "யாரு சாமி இந்தாளு..?” தியேட்டரில் ஜெயிலரின் காவாலா பாடலுக்கு வைப்... ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக தமன்னாவின் 'காவாலா' பாடல் தான் வெளியானது.

ஜெயிலர் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்ததில் தமன்னாவின் 'காவாலா' பாடலுக்கு ரொம்பவே முக்கியமான பங்கு உள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் ஓடிய திரையரங்கில் ரஜினியின் 60ஸ் கிட்ஸ் ரசிகர் ஒருவர் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

 Jailer: An old man dancing to Jailer Kaavaalaa song in the theatre

காவாலா பாடலுக்கு வைப் கொடுத்த 60ஸ் கிட்ஸ்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. நெல்சனுடன் முதன்முறையாக கூட்டணி வைத்த ரஜினிக்கு, ஜெயிலர் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது. பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் தடுமாறி நின்ற ரஜினிக்கு இது எதிர்பாராத வெற்றி என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோருடன் தமன்னாவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் என்ட்ரியாகும் தமன்னாவுக்கு ரொம்பவே அதிகமான காட்சிகள் இல்லையென்றாலும், கொஞ்ச நேரத்தில் ரசிகர்களுக்கு வைப் கொடுத்துவிட்டு செல்கிறார். இப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் தான் இதற்கெல்லாம் காரணம்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக 'காவாலா' பாடல் தான் வெளியானது. அனிருத் இசையில் தமன்னாவின் ஆட்டத்தை பார்த்து ரஜினி ரசிகர்களே அதிர்ந்துவிட்டனர். இந்த ஒரே பாடலில் 'ஜெயிலர் தலைவரின் படம் என்பது போய், தமன்னாவின் காவியம்' என மாறியது. காவாலா பாடலில் இருந்த தமன்னாவின் வைப் படம் முழுவதும் இருக்கும் என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர்.

 Jailer: An old man dancing to Jailer Kaavaalaa song in the theatre

ஆனால், தமன்னாவை ஆந்திரா மீல்ஸ் சைடிஸ் போல பயன்படுத்திக்கொண்டார் நெல்சன். ஆனாலும் தியேட்டரில் படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு காவாலா பாடல் வைப் குறையவே இல்லை. நடிகைகள், சினிமா பிரலங்கள், இளைஞர்கள், 2கே கிட்ஸ்கள் என ஏராளமானோர் இப்பாடலுக்கு இன்ஸ்டா ரீல்ஸில் பெர்ஃபாமன்ஸ் செய்தனர். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரஜினியின் 60ஸ் கிட்ஸ் ரசிகர் ஒருவர் அதகளம் செய்துள்ளார்.

திரையரங்கில் ஜெயிலர் படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர், காவாலா பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் மஜாவாக டான்ஸ் ஆடி அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தார். ஒருகட்டத்தில் தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹிப் மூவ்மெண்ட் எல்லாம் கொடுத்து அவர் ஆடியது ரசிகர்களுக்கே வைஃப் கொடுத்துள்ளது. இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "அச்சச்சோ.. இவரா? பயங்கரமான ஆளாச்சே" என மிட்நைட் மசலா என்ற கேப்ஷன் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X