நைட் ஆனா போதும்.. தனுஷ் பண்ற அலப்பறை இருக்கே.. ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமார் ரகளை பேட்டி!
சென்னை: கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாராப்பா இவரு, இப்படி தமிழ் பேசுறாரே என அவரது லேட்டஸ்ட் பேட்டி ஒன்று ரசிகர்களை மிரள வைத்துள்ளது. பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மாமனார் ரஜினிகாந்த் மற்றும் மருமகன் தனுஷ் என ஒரே நேரத்தில் இருவருடனும் தமிழ் படங்களில் நடித்து மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் சிவராஜ்குமார்.
பத்து தல படத்தின் ஒரிஜினல் கன்னட படமான மஃப்டி பட ஹீரோவான சிவராஜ்குமார் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டு வருகிறார்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார் நடிகர் தனுஷ் உடன் இரவு நேரங்களில் பண்ண அலப்பறைகளை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் கேமியோ பண்ணியிருக்கேன்: கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும் முன்னணி நடிகருமான சிவராஜ்குமார் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தனது சமீபத்திய பேட்டியில் ஓபன் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் ஜெயிலர் படத்தின் வில்லனே சிவராஜ்குமார் தான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் விநாயகம் தான் வில்லன் என்பதை ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் ரிவீல் செய்திருந்தார். இந்நிலையில், ஜெயிலர் படத்தில் வெறும் 11 நிமிடங்கள் தான் வருவேன் என சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

கேப்டன் மில்லரில் வில்லன்: ஆனால், நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் மெயின் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் டீசரில் ராணுவ அதிகாரியாக குதிரையில் அவர் வரும் காட்சிகளே மிரட்டி இருந்தன.
மிட் நைட்டில் அலப்பறை: நடிகர் தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஃபன் பண்ணுவார், நைட் ஆனா போதும், சார் வாங்கனு எங்கயாவது ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவாரு, கடை சின்னதா தான் இருக்கும். ஆனால், டேஸ்ட் வேறலெவல்ல இருக்கும், குற்றாலத்துல ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தப்போ நைட் அம்மா மெஸ்க்கு போய் ஒரே அலப்பறை ஆகிடுச்சு..
ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை: இப்போ கூட ரசிகர்கள் என் கூட போட்டோ எடுக்க விரும்பினால், நான் கெத்தா அவங்களோட செல்ஃபி எடுத்துப்பேன். அது, எனக்கு பிடிக்கும், பாடிகார்ட்ஸ் இருந்தா கூட அவங்கள தள்ளியே வர சொல்லுவேன்.

ரசிகர்களை கிட்ட சேர்க்கமாட்டேன், அவங்களோட போட்டோ எடுக்க பிடிக்காதுன்னு நான் நடிக்க மாட்டேன். நான் இல்லை, யாரா இருந்தாலும், ரசிகர்கள் பார்த்து ஓகே சொன்னா அவங்க நடிகராகவே ஆக முடியும் என செம சூப்பரா தமிழில் பேசிய சிவராஜ்குமார், தான் சென்னையில் உள்ள நியூ காலேஜில் தான் படித்தேன் என்றும் அடையார் பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவன், 12பி, 25 சி பஸ்களில் தான் பயணம் செய்வேன், அது தான் என் ரூட் என வேறலெவலில் அலப்பறை பேட்டிக் கொடுத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமாரின் கலாட்டா நடிப்பை காண ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் கேப்டன் மில்லரில் மிரட்ட காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











