Jailer Audio Launch - ஜெயிலர் இசை வெளியீட்டு விழா.. அலப்பறை கிளப்பிய அனிருத்.. ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்
சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்தின் ஃபெர்பார்மென்ஸுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு அலப்பறையை கிளப்பினர்.
ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா இல்லை எப்போதும் ரஜினிதான் சூப்பர் ஸ்டாரா என்ற பஞ்சாயத்து பலமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் படமானது வெளியாகவுள்ளது. அதன் காரணமாக ரஜினியின் வேறு எந்த படத்துக்கும் இல்லாத எதிர்பார்ப்பு ஜெயிலர் படத்துக்கு உண்டாகியிருக்கிறது. எதிர்பார்ப்பை நெல்சன் பூர்த்தி செய்துவிடுவாரா என்பதற்கு ரிலீஸ் அன்று விடை தெரிந்துவிடும்.

அனிருத்: படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். ரஜினி படம் என்றாலே எப்போதும் ஸ்பெஷலாக பணியாற்றும் அனிருத் இந்த முறை ரஜினியுடன் தன்னுடைய ஃபேவரைட்டான நெல்சனும் இணைந்திருப்பதாக கூடுதல் எஃபர்ட் போட்டிருக்கிறார். அது படத்தின் பாடல்களை கேட்கும்போதே அசால்ட்டாக தெரிகிறது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ஜானரில் கலக்கலாக கொடுத்திருக்கிறார்.
ஹுக்கும்: படத்தின் ஆல்பத்திலேயே வைரக்கல்லாக இருப்பது ஹுக்கும் பாடல்தான். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் ரஜினிதான் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற தொனியில் அந்தப் பாடல் உருவாகியிருந்தது. பாடலை சூப்பர் சுப்பு எழுதியிருக்கிறார். பாடலின் வரிகளையும், ட்யூனையும் கேட்ட ரசிகர்கள் பயங்கரமாக வைப் செய்துவருகின்றனர்.
ஆடியோ வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டுவ் விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதில் அனிருத் ஹுக்கும் பாட்லாஇ பாடி ஃபெர்பார்மென்ஸ் செய்தார். அதனை கேட்ட ரசிகர்கள் உச்சக்கட்ட வைபுக்கு சென்றனர். குறிப்பாக, பேரை தூக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு என்ற வரிகளை அனிருத் பாடும்போது ரசிகர்களும் சேர்ந்து பாடினர்.
ஒன்ஸ்மோர் கேட்ட ரசிகர்கள்: மேடைக்கு கீழிருந்து பாடிக்கொண்டே ஸ்டேஜ் ஏறிய அவர் பாடி முடித்தார். ஆனால் ரசிகர்களோ அனிருத்திடம் மீண்டும் பாடும்படி ஒன்ஸ்மோர் கேட்டனர். அதற்கு எந்தவித சலிப்பும் இல்லாமம் மீண்டும் தன்னுடைய ராக் ஃபெர்பார்மன்ஸை கொடுத்தார் அனி. இதனை ரஜினிகாந்த் ரொமப்வே ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்.
அனிருத் பேச்சு: அதனைத் தொடர்ந்து பேசிய அனிருத், " நெல்சனை எனக்கு பல வருடங்களாக தெரியும். முதல் படம் முழுதாக முடியவில்லை. பிறகு ஏற்கனவே பார்த்த வேலைக்கு சென்றுவிட்டார்.அதன் பின் கோலமாவு கோகிலா எடுத்து ஹிட் கொடுத்தார். நான்காவது படம் சூப்பர் ஸ்டாருடன். நெல்சா இந்த முறை குறி மிஸ்ஸே ஆகாது. டோண்ட் வொர்ரி. நெல்சனுக்குள் ஒரு எமோஷனல் இருக்கும். அதை வெளியில் காண்பிக்கமாட்டார்.
தலைவரு நிரந்தரம்: என்னை இரண்டோ,மூன்றோ வயதில்தான் முதன்முறையாக தியேட்டருக்கு கூட்டிட்டு போனார்கள். அண்ணாமலை முதல் நாள் முதல் ஷோ. அப்போ இருந்த பவர் இப்போதும் இருக்கிறது. அலப்பறை கிளப்புறோம், தலைவரு நிரந்தரம். ஆகஸ்ட் பத்தாம் தேதி நெல்சன் சரியான ரிப்ளை கொடுத்துடுவாரு" என்றார்.


Click it and Unblock the Notifications











