Jailer Audio Launch - ஜெயிலர் இசை வெளியீட்டு விழா.. ஹுக்கும் பாடல் கேட்டு ரஜினி ரியாக்ஷன் என்ன?
சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு பேசியிருப்பது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
ரஜினி நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் கமிட்டானார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் படமானது ஆகஸ்ட் பத்தாம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த படம்: ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. இந்தப் படத்தை மெகா ஹிட் படமாக கொடுத்து தான் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை ஆணித்தரமாக உணர்த்தி தலைவர் கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். நெல்சன் திலீப்குமாரும் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து: இதற்கிடையே ரஜினி கடைசியாக நடித்த இரண்டு படங்களும் தொடர்ந்து தோல்வியடைந்ததால் ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலி கொஞ்சம் ஆட்டம் கண்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. மேலும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்றும் வியாபாரத்திலும், சம்பளத்திலும் இப்போதைக்கு அவர்தான் நம்பர் 1 என்றும் பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
ஹுக்கும் பாடல் வரிகள்: இப்படிப்பட்ட சூழலில் தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா; தலைமுரை கடந்து ஹிட்டானவன்; பேரை தூக்க நாலு பேரு பட்டத்தை பறிக்க நூறு பேரு குட்டிச்செவுத்தை எட்டிப்பார்த்தா உசர கொடுக்க கோடி பேரு; உன் அலும்ப பார்த்தவன் உங்கொப்பன் விசில கேட்டவன் உன் மவன் பேரன ஆட்டம் போட வைப்பவன்' வரிகள் முழுக்க முழுக்க விஜய்யை தாக்கி எழுதியதாகவே கருதப்பட்டது.
ஆடியோ வெளியீட்டு விழா: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலைமையில் ரஜினியின் பேச்சு என்னவாக இருக்கும் என்பதை கேட்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அவர்களது ஆவலை பொய்யாக்காத வகையில்தான் ரஜினியின் பேச்சும் அமைந்திருந்தது. இந்தச் சூழலில் ஹுக்கும் பாடலை எழுதிய சூப்பர் சுப்பு பேச்சும் கவனத்தை ஈர்த்துள்ளது.
என்ன பேசினார்: விழாவில் பேசிய சூப்பர் சுப்பு, "பாடலை பாராட்டி தலைவர் எனக்கு ஃபோன் செய்யவில்லை. அனிருத்துக்கு வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். அதனை எனக்கு அனிதான் ஃபார்வேர்ட் செய்திருந்தார். அதை ஓபன் செய்ததும், சூப்பர் சுப்பு சும்மா ஃபேன்ஸ்லாம் கொண்டாடப்போறாங்க என்றார். இதுக்கு மேல எனக்கு என்ன வேணும். கரியர்ல இதுக்கு மேல நாம் என்ன சாதிக்கப்போறோம்" என மகிழ்ச்சியோடு கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன்,"இந்தப் படத்தில் அப்பா - மகன் பற்றிய பாடலை நான் எழுதியிருக்கிறேன். எனக்கு எமோஷனலாக இருக்கிறது. ஏனென்றால் நானும் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. ரஜினிக்கு இரண்டு பெண்கள் இருக்கிறாரக்ள்.அவருக்கு ஒரு பையன் இருந்தால் அவர் அனிருத் மாதிரிதான் இருப்பார். ரஜினி மேல் அபரிமிதமான பாசத்தை வைத்திருக்கிறார் அனிருத்" என பேசினார். முன்னதாக விழா அரங்கத்துக்குள் ரஜினி வந்தபோது அனிருத்துக்கு இரண்டு முத்தங்களை ரஜினி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











