Jailer Audio Launch: ரஜினியால் மட்டுமே 20 கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா நடந்திருப்பேன்.. நெல்சன் திலீப்குமார்
சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நெல்சன் திலிப்குமாரின் பேச்சு நேரு உள்விளையாட்டு அரங்கத்தையே சிரிப்பொலியில் அதிர வைத்தது.
ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்படவில்லை. இதன் காரணமாக ரஜினிகாந்த் பேசிய காக்கா, கழுகு கதை மட்டும் வெளியில் கசிந்தது. இந்த சூழலில் முழு நிகழ்ச்சியும் இன்று சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் முழு பேச்சும் இதோ.

நெல்சன் பேச்சு: "இந்தப் படத்தில் நடித்த பெரிய ஸ்டார்கள் அனைவருமே ரஜினி சாருக்காகத்தான் உள்ளே வந்தார்கள். ஜாக்கி ஷெராஃப்பிடம் கதை சொல்ல அவரது பண்ணை வீட்டுக்கு போயிருந்தேன். அப்போது நீச்சல் அடித்துக்கொண்டிருந்தவர் அப்படியே வந்து சிறிது நேரம் கதை கேட்டார் பிறகு போதும் விடு ரஜினி சார் படம் நான் பண்றேன் என சொல்லிவிட்டார். அதேபோல் மோகன் லால் அவரே ஃபோன் செய்து எப்போது ஷூட்டிங் எப்போது வர வேண்டும் என கேட்டார். சிவராஜ்குமார் சாரிடமும் கதை சொன்னேன். அவரை பார்க்கும்போது புனித் ராஜ்குமார்தான் எனது நியாபகத்துக்கு வருவார். ரஜினியால் மட்டும்தான் இவர்கள் எல்லாம் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்கள். அதனால் அவர்களை நான் மிஸ் யூஸ் செய்யவில்லை.
ரம்யாகிருஷ்ணன்: ரம்யா கிருஷ்ணனிடம் கதை சொல்ல போய் அமர்ந்த உடனேயே இது படையப்பா மாதிரி இல்லைல என்றார். நான் உடனே அய்யோ ஜி அதுமாதிரிலாம் நான் செய்ய முடியுமா. இது சாஃப்ட்டான கதாபாத்திரம்தான் என்று சொல்லி ஒத்துக்கொள்ள வைத்தேன். படத்தில் மொத்தம் இரண்டு செட் நடிகர்கள். ஒரு செட் ரஜினி, மோகன் லால், ஜாக்கி, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு போன்ற சிறந்த நடிகர்கள். மற்றொரு பக்கம் விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ போன்றவர்கள். ரஜினி சார் இவர்களை எல்லாம் பார்த்து யாரு இவங்க எல்லாம் உங்க ஃப்ரெண்ட்ஸா என்று கேட்பது போல்தான் பார்ப்பார். முக்கியமாக ரஜினிசாரிடம், விடுங்க அவங்க எப்ப நடிச்சு முடிக்கிறாங்களோ அப்போ வரைக்கும் போகலாம் என்ற தொனியும் இருக்கும்.
அனிருத்: அனிருத் எப்போதும் எனக்கு மோட்டிவேஷனலான ஆள். நான் பெரிய டைரக்டர் என்று எனக்கே ஒரு ஃபீலை கொடுத்துவிடுவார். அனிருத் ஸ்டூடியோவில் எப்போது பத்து பசங்க இருப்பாங்க. அவங்களுக்கு வெளியுலகத்துல நடக்குறதே தெரியாது. அவ்ளோ ஜாலியா இருப்பாங்க. ஏண்டா உங்களுக்கெல்லாம் கஷ்டமே வராதா என கேட்டால் அதை விடுங்க நெல்சா இத பாருங்கனு சொல்வாங்க.
அதை பார்த்தா வீடியோ கேம். என்ன இவனுங்க வீடியோ கேம் விளையாடுறானுங்க. குழந்தைகள்ட்ட படத்த கொடுத்துட்டோமேனு பதறுவேன். ஆனா வேலைனு வந்துட்டா சிறப்பா இருப்பாங்க. படம் என்னிடமிருந்து அனிருத்திடம் போயிருக்கிறது. அவர்ட்டேர்ந்து தியேட்டருக்கு வரும். கண்டிப்பா இது ஸ்பெஷலாத்தான் இருக்கும்
ரஜினி சார்: அண்ணாமலை படத்தைத்தான் முதன்முதலில் ரஜினி படங்களீல் பார்த்தேன். அண்ணாமலை படத்தில் டோரை திறக்கும்போது வாயில் சிகரெட்டுடன் நின்றார். புகை மட்டும் பறந்தது. மிரண்டுட்டேன். பிறகு பீஸ்ட் படம் நான் பண்ணும்போது விஜய்தான் எனக்கு அந்த கான்ஃபிடென்ஸை கொடுத்தார். நீ படம் பண்ணு கண்டிப்பா நடக்கும் என்றார். ஒருவழியாக ரஜினியை முதன்முதலில் பார்த்து கதை சொன்னேன். ரொம்ப கம்ஃபர்டபிளா வெச்சிருந்தார். அவர் யாரையும் ஹர்ட் செய்யக்கூடாது என்று கான்ஷியஸாகவே இருப்பார்.
அவநம்பிக்கையே இல்லை: இந்தப் படம் ஆரம்பிக்கும்போது என் மேல் நெகட்டிவ் பார்வை பலரிடம் இருந்தது. ஆனால் அவர் என்னிடம் அதை காண்பித்ததே இல்லை. ஒருமுறை கண்ணனிடம் ஃபோன் செய்து சார் ரஜினி கான்ஃபிடன்ஸா இருந்தா பண்ணலாம் இல்லைனா வேண்டாம் விடுங்கனு சொன்னேன். ஆனால் அவர் நம்பிக்கையை இழக்கவே இல்லை. படத்தின் ஷூட்டிங் முடியும்வரை என்னிடம் நெகட்டிவ் பார்வையை ரஜினி சார் வைத்ததே இல்லை. அவ்வளவு நம்பினார். தலைவன் தலைவன்தான் தொண்டன் தொண்டன்தான்.
நெல்சன் சார்: ரஜினி என்னை நெல்சன் சார்னுதான் கூப்பிடுவார். நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. சார் என்ன சார் நெல்சன் சார் என்று சொல்வார். அதுமட்டுமின்றி நான் அவரை க்ராஸ் செய்து நடந்தால் இவர் எழுந்து நின்றிடுவார். அது எனக்கு அவ்வளவு கூச்சமாக இருக்கும் என கூறிய நெல்சன் ரஜினி சார் உங்களால நான் அந்த ஷூட்டிங் ஸ்பாட்ல 20 கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா நடந்திருப்பேன் என தனக்கே உரிய பாணியில் பேசி ரஜினியை சிரிக்க வைத்தார்.


Click it and Unblock the Notifications











