Jailer Audio Launch - ரஜினியிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் செய்த அலப்பறை.. ரகளை பண்ணிருக்காருப்பா

சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] தன்னிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் திலீப்குமார் செய்த அலப்பறைகளை ரஜினி விவரித்துள்ளார்.

ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். நெல்சனின் படத்தில் டார்க் காமெடி களைகட்டும். ரஜினிக்கும் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும். எனவே நெல்சன் ரஜினியை எப்படி காட்சிப்படுத்தியிருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். ஆகஸ்ட் பத்தாம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது.

Jailer Audio Launch LIVE News Updates: Rajinikanth has described what Nelson Dilip Kumar did on the shooting spot

நெல்சன் அலப்பறை: நெல்சன் திலீப்குமாரின் படத்தில் காமெடி எவ்வளவு இருக்குமோ அதேபோல்தான் அவரும் இருப்பார் என்பது அனைவரும் அறிந்தது. இந்தச் சூழலில் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த்திடமும் படு காமெடியாக பேசி அலப்பறை செய்திருக்கிறார் நெல்சன். இதுகுறித்து ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த்,

ரஜினி பேச்சு: கதையெல்லாம் கேட்டு முடித்துவிட்டு ஷூட்டிங் சென்றோம். அப்போது நெல்சன் என் அருகில் வந்தார். வந்து சார் உங்க காதல் கதையை சொல்லுங்க சார் என்றார். என்னது காதல் கதையா என்ன நெல்சன் என கேட்டேன். அதற்கு அவர் இல்லை சார் நிறையே பேர் சொல்லிருக்காங்க ஆனா அதை உங்க வாயால கேட்க வேண்டும். சொல்லுங்க சார் அதான் கதையெல்லாம் கன்ஃபார்ம் ஆகிடுச்சே.கொஞம் சார்ஜ் ஏத்திக்கணும் சார் என்றார்.

கமல்ட்ட கேட்டீங்களா?: இவர் சார்ஜ் ஏத்திக்க எங்க காதல் கதையெல்லாம் சொல்லனுமாக்கும் என நினைத்துக்கொண்டேன். பிக்பாஸ்ல கமலோட ஒர்க் பண்ணிங்களே அவர்ட்ட காதல் கதையை கேட்டீங்களா என கேட்டேன். அதற்கு இவர் கேட்டேன் சார் என்றார்.நான் அவர் சொன்னாரா என கேட்டேன். ஆமா சார் சொன்னார் என்றார். சார் உங்க காதல் கதையா சொன்னீங்களா என்று நான் அவர்ட்ட ஃபோன் பண்ணியா கேட்க முடியும்.

சாவடிக்கிறான் சார்: அதேபோல் ஒருமுறை யோகிபாபு நடித்துக்கொண்டிருந்தார். ஷாட் ஓகே ஆகவில்லை. உடனே நெல்சன் இன்னும் கொஞ்சம் குறைங்க. இப்படி வேண்டாம் அப்படி வேண்டாம் என சொன்னார்.. யோகிபாபு என்னிடம் வந்து சார் நெல்சன் சாவடிக்கிறான் சார் என்றார். என்னிடம் இப்படி சொல்வதற்கு முன்னாடி நெல்சனிடம் யோகிபாபு டேய் மைக் எதும் வைச்சிருக்கியா என்றார். அதற்கு நெல்சனோ இல்லை என சொன்னார். அதுக்கு பிறகு தைரியமா என்னிடம் யோகிபாபு, சார் சாவடிக்கிறான் சார். ஸ்கேல் வெச்சு மெஷர் பண்ணியா நடிக்க முடியும் என்றார். அதை கவனித்த நெல்சனோ, ஓய் என்ன சாவடிக்கிறேனு சொல்ற. உன் லிப் மூவ்மெண்ட் எனக்கு தெரியுது என்றார்.

Jailer Audio Launch LIVE News Updates: Rajinikanth has described what Nelson Dilip Kumar did on the shooting spot

நீலாம்பரியிடம் மானமே போயிடுச்சு: இப்படி ஜாலியாக இருந்தாலும் வேண்டும் என்பது கிடைக்கும்வரை விடமாட்டார். ஒரு ஷாட்டில் ரம்யா கிருஷ்ணனிடம் எக்ஸ்பிரெஷன் கொடுக்க வேண்டும். ஆனால் நெல்சன் திலீப்குமாருக்கு திருப்தி இல்லை. மொத்தம் 8 டேக்குகள் போயின. 24 வருடங்களுக்கு பிறகு நீலாம்பரிக்கு முன்னாடி இந்த படையப்பாவோடு மானமே போயிடுச்சு.

கலாநிதி மாறன் சொன்னதுபோல் அனிருத்தும் நெல்சனும் இணைந்து நடிக்க வேண்டும். ப்ரோமோவுக்கே ப்ரோமோ செய்தவர்கள் இவர்கள்தான். ஒருமுறை நெல்சனிடம் ஏன்ப்பா அனி எதும் லவ் பண்றானானு கேட்டேன். ஐய்யய்ய அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல சார் என்றார். நான் ஏன் என கேட்டேன். ஆமா சார் லவ் பண்ணா ஒருநாளைக்கு இரண்டு, மூன்று தடவைதான் லவ்வர்ட்ட ஃபோன்ல பேசணும். ஆனால் இவன் ஃபோனே எடுக்கமாட்டான் என கூறினார்" என்றார். ரஜினியின் இந்தப் பேச்சு அரங்கத்தில் இருந்தவர்களை மொத்தமாக சிரிப்பலையில் சிக்க வைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X