Jailer Audio Launch - விஜய் காக்கா இல்லையாம்.. சோஷியல் மீடியாவில் கிளப்பிவிடுவாங்கனு கணித்த ரஜினி

சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] காக்கா, கழுகு கதை குறித்து சோஷியல் மீடியாவில் நிச்சயம் கிளப்பிவிடுவார்கள் என ரஜினிகாந்த் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் டாபிக் என்றால் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துதான். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என அவரது ரசிகர்கள் கோதாவில் குதிக்க ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என அவரது ரசிகர்கள் மறுபக்கம் முஷ்டி முறுக்கினர். சூழல் இப்படி இருக்க ஹுக்கும் பாடல் வரிகள் இந்த விவாதத்தை சமூக வலைதளங்களில் இரண்டு பேரின் ரசிகர்களுக்கிடையே மோதலாக மாற்றியது.

Jailer Audio Launch LIVE News Updates: Rajinikanth Speech in Jailer Audio launch

ரஜினியின் பேச்சு: இந்தச் சூழலில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காக்கா, கழுகு கதையை சொல்லி அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த பேச்சை கொண்டு வந்திருந்தார். காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார் என அவரது ரசிகர்கள் ஒருபக்கம் கூற லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் இதற்கு விஜய் பதிலடி கொடுப்பார் என மறுபக்கம் விஜய் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

என்ன சொன்னார் ரஜினிகாந்த்: நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 28ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா நடந்தபோது நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. எனவே ரஜினிகாந்த் காக்கா, கழுகு கதையை கூறினார் என்ற செய்தி மட்டும் வெளியே வந்தது. ஆனால் அதற்கு பிறகு அவர் சொன்ன விஷயம் இன்று சன் டிவியில் பார்த்த பிறகுதான் தெரியவந்திருப்பதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

விஷயம் இதுதான்: அதாவது ஆடியோ வெளியீட்டு விழாவில் அந்தக் கதையை சொல்லி முடித்த பிறகு, "நான் காக்கா, கழுகு கதையை சொன்ன பிறகு; மீடியா, சோஷியல் மீடியா, ஊடகங்கள் எல்லாம் ஆஹா இவரை காக்கானு சொல்லிட்டாரு; இவரை கழுகுனு சொல்லிட்டாருனு கிளப்பிடாதீங்க. நடக்குறததான் நான் சொல்றேன். வேற எந்த அர்த்தத்தையும் தயவு செய்து கொடுக்காதீங்க. நான் இவ்வளவு சொன்னாக்கூட விடப்போறது இல்லை.

குரைக்காத நாயும் இல்ல குறை சொல்லாத வாயும் இல்ல: குரைக்காத நாயும் இல்ல; குறை சொல்லாத வாயும் இல்ல; இது இரண்டும் இல்லாத ஊரும் இல்ல; இதுல தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா. கிடையாது. நம்ம வேலைய பார்த்துட்டு நாம் போயிட்டே இருக்கணும்" என்றார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், தான் காக்கா என்று விஜய்யை சொல்லவில்லை என்பதை அந்த மேடையிலேயே ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி இந்த மாதிரி பிரச்னைகள் வரும் என்று முன்னரே கணித்திருக்கிறார் என கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X