Jailer Audio Launch - 24 வருடங்களுக்கு பிறகு.. படையப்பா முன் நீலாம்பரி பெருமைமிகு பேச்சு
சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரம்யா கிருஷ்ணனின் பேச்சை பலரும் ரசித்தபடி கேட்டனர்.
ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்காக இன்று தொடங்கிய டிக்கெட் புக்கிங் ஜரூராக நடந்துவருகிறது. நிச்சயம் இந்தப் படத்தை ஹிட் கொடுத்துவிட்டு கோலிவுட் தன்னுடைய கோட்டை என ரஜினி நிரூபிப்பார் என்ற நம்பிகையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

ஆடியோ வெளியீட்டு விழா: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆனால் அந்த நிகழ்ச்சியானது நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இதனால் விழாவில் பலர் பேசியது வெளியே தெரியவில்லை. இந்தச் சூழலில் அந்த விழா இன்று சன் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
ரம்யா கிருஷ்ணன் பேச்சு: விழாவில் பேசிய ரம்யா கிருஷ்ணன், எனக்கு இப்போது நிறைய கேரக்டர்கள் வருதுனா அதுக்கு காரணம் படையப்பாதான். 24 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பதை நேரில் ரசிக்க வாய்ப்பு தந்த ஜெயிலர் டீமுக்கு ரொம்பவே நன்றி. ஷூட்டிங்கில் ஒவ்வொரு தருணத்தையும் ரொம்பவே கொண்டாடினேன். இப்போதும் அவர் முதல் படம் ஒர்க் பண்ணுற மாதிரிதான் பண்ணுறார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
எளிமை: அதில் முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது எளிமை.மாமனிதர் அவர். ரஜினியை நான் பழி வாங்கிருக்கேனா இல்லையா என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நெல்சனுடன் பணியாற்றியது ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம். தற்போதைய இளம் இயக்குநர்கள் இரவு நேர ஷூட்டிங்கைத்தான் யோசிக்கிறார்கள். ரஜினி வருவதால் நைட் ஷூட் நடக்காது என்று நினைத்தேன். ஆனால் ரஜினிதான் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக போனார்.
நீலாம்பரி: தனக்கு டஃப் கொடுத்தது இரண்டே பேர்தான். ஒன்று மார்க் ஆண்டனி இன்னொன்று நீலாம்பரி என ரஜினிகாந்த் சொன்னது அவருடைய பெருந்தன்மை" என்று பேசி முடித்தார் ரம்யா கிருஷ்ணன். அவரது பேச்சை அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டி ரசித்தனர். அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த்தும், ரம்யா கிருஷ்ணனும் படையப்பா படத்தில் நடித்திருந்ததும்; அதில் ரம்யா கிருஷ்ணன் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.


Click it and Unblock the Notifications











