Jailer: 6 நாள்ல.. அரை நாள் தான் என்ன ஆட வச்சாரு.. காவாலா ஷூட்டிங் சம்பவத்தை சொன்ன சூப்பர்ஸ்டார்!

சென்னை: ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடல் உருவான விதம் குறித்தும் அந்த பாடலுக்கு நடனமாட கடைசி நாளில் தான் தன்னை அழைத்தார்கள் என்கிற சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லி நேரு ஸ்டேடியத்தையே சிரிப்பொலியில் ஆழ்த்தி விட்டார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

Jailer Audio Launch: Rajinikanth opens up about how Kaavaala shoot happens

அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ரஜினிகாந்த் ரகளை: நடிகர் ரஜினிகாந்தின் படங்களின் இசை வெளியீட்டு விழா என்றாலே ரஜினிகாந்தின் பேச்சு தான் ஹைலைட்டாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரம் செம கேஷுவலாக பல விஷயங்களையும் படத்தை பற்றி ஏகப்பட்ட சுவாரஸ்யங்களையும், தன்னுடன் நடித்த நடிகர்கள் குறித்தும் எப்போதும் போலவே பஞ்ச் போட்டு பேசி அசர விட்டார்.

Jailer Audio Launch: Rajinikanth opens up about how Kaavaala shoot happens

சாவடிக்கிறான் சார் என இயக்குநர் நெல்சன் கொடுக்கும் டார்ச்சர் குறித்து யோகி பாபு பேசியதை ரஜினி மேடையில் சொன்ன உடனே ஆடியோ லாஞ்சே அமர்க்களப்பட்டு போனது. அதன் பின்னர், காவாலா பாட்டுக்கு ரஜினிகாந்த் வந்ததும் கேமராக்கள் தமன்னா பக்கம் ஃபுல் ஃபோகஸ் செய்யத் தொடங்கின.

ஆறு நாளில் அரை நாள் தான் கூப்பிட்டாங்க: காவாலா பாட்டு ஷூட்டிங்னு நெல்சன் சொன்னாரு, எப்போ ரெடியாகி வரணும்னு கேட்டேன்.. சொல்றேன் சொன்னாரு.. அப்புறம் பார்த்தா ஷூட்டிங் போகுதுன்னு கேள்விப்பட்டேன்.. ஓகே நெல்சன் சார் கூப்பிடுவாருன்னு வெயிட் பண்ணேன்.. ஒரு நாள், ரெண்டு நாள்னு 5 நாள் ஷூட்டிங் போச்சு.. இன்னும் நம்மள ஏன் கூப்பிடலன்னு ஒரே டென்ஷன்.. கடைசியா நாளைக்கு வந்துடுங்கன்னு போன் வந்துச்சு..

Jailer Audio Launch: Rajinikanth opens up about how Kaavaala shoot happens

காலையிலேயே வரணுமான்னு கேட்டா.. பொறுமையா மதியம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.. அங்கே வந்தா ஜானி மாஸ்டர் பெரிய ஸ்டெப்ஸ் இருக்கப் போகுதுன்னு பார்த்தா.. இரண்டே இரண்டு ஸ்டெப் தான்.. அவ்ளோ தான் முடிஞ்சிடுச்சுன்னு சொன்னாங்க.. எனக்கு சுத்தமா புரியலை.. அப்புறம் நெல்சன் சார் ஃபிரேமை பாருங்கன்னு தமன்னாவை காட்டினாரு என ரஜினி பேசியதும் தமன்னா வெட்கத்தில் சிரித்தே விட்டார்.

காவாலா பாட்டுக்கு ரஜினி கேமியோ பண்ணியிருக்காரு என ட்ரோல் செய்த நிலையில், தன்னையே 6 நாளில் அரை நாள் தான் கூப்பிட்டாங்க என வெளிப்படையாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் ரஜினிகாந்த்.

Jailer Audio Launch: Rajinikanth opens up about how Kaavaala shoot happens

அந்த பாடல் வெளியாகி வேறலெவல் ஹிட் அடித்த நிலையில், செம ஹேப்பியான ரஜினிகாந்த், அனிருத், தமன்னா, அருண்ராஜா காமராஜ், நெல்சன், ஜானி மாஸ்டர் என அந்த பாடலுக்காக உழைத்த அத்தனை பேரையும் பாராட்டினாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X