Jailer: ஆடியோ லான்ச் அப்டேட் கொடுத்த ஜெயிலர் டீம்... என்னய்யா இது டீசர்லயே இப்படி மிரட்டுறீங்க..?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.
நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
ஜெயிலர் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில், அடுத்த மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.
அதன்படி, ஜெயிலர் இசை வெளியீட்டு விழா குறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்ட டீசர் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்துள்ளார். இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. ரஜினியுடன் தமன்னா, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் 20 தினங்களே உள்ளதால், ப்ரொமோஷன் வேலைகளை தொடங்கிவிட்டது படக்குழு. அண்ணாத்த தோல்வியில் இருந்து ரஜினிக்கு கம்பேக் கொடுக்கும் படமாக ஜெயிலர் இருக்கும் என்பதால், ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக காவாலா, ஹ்ம்க்கும் என இரண்டு பாடல்களை வெளியிட்டு அதிரடி காட்டியது ஜெயிலர் டீம்.
அதனைத் தொடர்ந்து அடுத்த அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடத்த முடிவெடுத்துள்ளது சன் பிக்சர்ஸ். இதற்காக மினி டீசரையும் வெளியிட்டு ஹைப் கொடுத்துள்ளனர்.
அதில், "என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களே" என ரஜினியின் வாய்ஸ் ஓவர் ஒலிக்க, தலைவரின் ரசிகர்கள் கூஸ்பம்ப் மொமண்ட்டுக்காக காத்திருக்கின்றனர். ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. இதனால், அதற்கும் சேர்த்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சம்பவங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது தனியார் கல்லூரியின் மைதானத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா நடக்கலாம் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மோகன் லால், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைக்கு டீசரை மட்டும் வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், விரைவில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் தேதியையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











