Jailer BO Rampage: வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களையே பின்னுக்குத் தள்ளிய ஜெயிலர்.. சூப்பர் சம்பவம்!

சென்னை: விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்கு எல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் பண்ணியதை விட ஹாலிவுட் படங்களுக்கே சில வெளிநாடுகளில் சம்பவம் செய்திருப்பது தான் ஒட்டுமொத்த திரையுலகமும் வியந்து பார்த்து வருகிறது.

குறைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை நாம பருந்து போல உயர பறந்துக்கிட்டே இருக்கணும் என சொன்னதை போலவே செய்துக் காட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

Jailer beats Barbie and other Hollywood movies in some Overseas

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அபுதாபி, ஓமன், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் என திரையிட்ட அனைத்து இடங்களிலும் வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

சுதந்திர தினம் வரை ஹவுஸ்ஃபுல்: ஆகஸ்ட் 10ம் தேதி வியாழனன்று வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமையான இன்று மட்டுமின்றி திங்கட்கிழமையான நாளையும் சுதந்திர தின விடுமுறையான செவ்வாய்க்கிழமை வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக புக் மை ஷோ மற்றும் பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஃபுல் ரெட்டாக காட்சியளிக்கின்றன.

தொடர்ந்து 6 நாட்கள் சோலோ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஒரே ஜெயிலர் சத்தமாகவே கேட்கிறது. மாயாஜாலில் முதல் நாள் மட்டும் 72 ஷோ இல்லாமல் தொடர்ந்து அதே அளவிலான காட்சிகள் ஆகஸ்ட் 15 வரை நீடித்திருப்பது ரஜினிகாந்த் எனும் ஒரு தனி மனித பவரை தாண்டி வேறு எதுவும் இல்லை என்கின்றனர்.

ஹாலிவுட் படங்களை பின்னுக்குத்தள்ளி: கோலிவுட் நடிகர்களின் படங்களை பின்னுக்குத் தள்ளுவது எல்லாம் ரெக்கார்டு பிரேக்கர்கள் செய்யும் விஷயம் ரஜினிகாந்த் ரெக்கார்டு மேக்கர் என்பதால் UAE, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலிடத்தில் வசூலில் இருந்து வந்த பார்பி படத்தை பின்னுக்குத் தள்ளி ஜெயிலர் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்பி படம் ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு போட்டியாக ஆகஸ்ட் 10ம் தேதி தான் வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் அங்கேயும் சூப்பர்ஸ்டார் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்பீடாகும் ரஜினி: இந்த வயதிலும் ரசிகர்கள் தன் மீது உலகளவில் அன்பு வைத்திருப்பதை அறிந்து ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் இன்னமும் ஸ்பீடாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தா.செ. ஞானவேல் மற்றும் லோகேஷ் கனகராஜ் படங்கள் எல்லாம் ஜெயிலர் படத்தை விட டபுள் மடங்கு சம்பவம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X