Jailer: “காதுல பூ சுத்தலாம் ஆனா பூந்தொட்டியை வைக்காதீங்க": ஜெயிலர் புக்கிங்... ப்ளூ சட்டை மரண கலாய்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.
இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் மாஸ் காட்டி வருகிறது.

தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ஜெயிலர் டிக்கெட் புக்கிங் வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஜெயிலர் படத்துக்கான ஆன்லைன் புக்கிங் குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக ட்ரோல் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் புக்கிங் - ப்ளூ சட்டை மரண கலாய்: ஜெயிலர் படம் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி தரமான கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் இந்த வாரம் 10ம் தேதி ரிலீஸாகிறது. அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கியதால் ஜெயிலர் படத்தைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஹைப் கொடுக்கும் விதமாக அடுத்தடுத்து ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு வருகிறது படக்குழு.
அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்துக்காக உலகம் முழுவதும் பயங்கரமான ப்ரமோஷன் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் டைம் ஸ்கொயரில் ஜெயிலர் படத்திற்காக பிரம்மாண்டமாக ப்ரோமோஷன் செய்துள்ளது சன் பிக்சர்ஸ். அதேபோல் தற்போது லாஸ் வீகாஸில் உள்ள பில் போர்டுகளிலும் ஜெயிலர் படத்தின் ஷோகேஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளது.

இதுவரை ஜெயிலர் படத்திற்காக அமெரிக்காவில் மட்டுமே 5 லட்சம் டாலர்கள் வரை அட்வான்ஸ் புக்கிங் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் முதல் மூன்று வாரங்களுக்கு டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதனைப் பார்த்து கடுப்பான ப்ளூ சட்டை மாறன், "USA: 3 weeks housefull in reservation. Marana mass!! அவதார் கூட புக்கிங் ஓப்பன் ஆனதும் 3 வாரம் ஃபுல் ஆகாது. காதுல பூ சுத்தலாம். ஆனா பூந்தொட்டியை தூக்கி வைக்காதீங்கடா" என ட்விட் செய்துள்ளார்.
மன்சூர் அலிகான் போஸ்டருடன் ப்ளு சட்டை மாறன் போட்டுள்ள இந்த ட்விட், ரஜினி ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கியுள்ளது. ரஜினியை கலாய்க்காமல் ப்ளூ சட்டை மாறனால் இருக்கவே முடியாது. இவருக்கு வேற வேலையும் கிடையாது என ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வசூலில் முக்கால் பங்கு தக தக தமன்னாவால்தான் வரப்போகிறது என ப்ளூ சட்டை மாறன் ட்விட் செய்திருந்தது வைரலானது.
தற்போது அமெரிக்காவின் அட்வான்ஸ் புக்கிங் குறித்து மேலும் காட்டமாக ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இவரது ட்ரோல் ஒருபக்கம் இருந்தாலும், ஜெயிலர் படத்திற்கு தொடர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சமும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











