Blue Sattai Maran: ரொனால்டோவிடம் ஜெயிலர் ரிவியூ கேட்ட ப்ளூ சட்டை மாறன்... ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நெல்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 600 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தை பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ தனது குடும்பத்துடன் பார்த்ததாக செய்திகள் வெளியாகின.

 Jailer: Blue Sattai Maran tweets asking Ronaldo for Rajinis Jailer review

இதனையடுத்து தற்போது ரொனால்டோவிடம் ஜெயிலர் படத்தின் விமர்சனம் கேட்டு ரஜினியை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ரொனால்டோவிடம் ஜெயிலர் ரிவியூ கேட்ட ப்ளூ சட்டை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம், இந்தாண்டின் இன்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. மேலும், இதுவரை 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, இயக்குநர் நெல்சன், அனிருத் மூவருக்கும் சொகுசு கார் பரிசாக கொடுத்தார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன். இந்நிலையில், 25 நாட்களை கடந்தும் ஜெயிலர் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதேநேரம் ஜெயிலர் ஃபீவர் குறைந்து, தற்போது ஷாருக்கானின் ஜவான் ஃபீவரில் ரசிகர்கள் உற்சாகமாகிவிட்டனர்.

ஜெயிலர் வெளியாவதற்கு முன்பிருந்தே ரஜினியையும் இந்தப் படத்தையும் ட்ரோல் செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன். அதேபோல் படம் வெளியான பின்னரும் விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஆகியவற்றை கலாய்த்து வந்தார். இந்நிலையில், தற்போதும் ரஜினியை ட்ரோல் செய்வதை நிறுத்தாத ப்ளூ சட்டை மாறன், கிறிஸ்டியானா ரொனால்டோவை வைத்து சம்பவம் செய்துள்ளார்.

 Jailer: Blue Sattai Maran tweets asking Ronaldo for Rajinis Jailer review

அதாவது துபாய் சென்றிருந்த ரொனால்டோ, தனது குடும்பத்தினருடன் ஜெயிலர் திரைப்படம் பார்த்து ரசித்ததாக சொல்லப்பட்டது. மேலும், ரொனால்டோ சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிரமான ரசிகர் என்றும், தலைவரின் ஃபேன்ஸ் உருட்டி வந்தனர். அதுமட்டும் இல்லாமல் ஜெயிலர் படத்தை கிறிஸ்டியானா ரொனால்டோ பயங்கரமாக ரசித்ததாகவும் கூறப்பட்டது.

 Jailer: Blue Sattai Maran tweets asking Ronaldo for Rajinis Jailer review

இந்நிலையில், ரொனால்டோ ஏன் இன்னும் ஜெயிலர் விமர்சனம் போடவில்லை என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். மேலும், "ரொனால்டோ இன்னும் ஜெயிலர் பாசிடிவ் விமர்சனம் போடாததால் தலைவரின் ரசிகர்கள் அதிர்ச்சி" எனவும் ட்வீட் போட்டு, ரஜினி ரசிகர்களை வம்பிழுத்துள்ளார். ரொனால்டோவை ரஜினியின் தீவிர ரசிகர் என தொடர்ந்து செய்திகள் வெளியானதை அடுத்து, ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X