Jailer: “கைய கொடுங்க சகல..” ஜெயிலரில் ரஜினியை கலாய்த்த நெல்சன்..? ப்ளூ சட்டையின் வில்லங்கமான ட்வீட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், ரஜினி - நெல்சன் கூட்டணியில் ரிலீஸான ஜெயிலருக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

இந்நிலையில், ஜெயிலரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குநர் நெல்சன் பங்கமாக கலாய்த்துவிட்டார் என்பதாக ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.
நெல்சன் சகலைக்கு வாழ்த்து சொன்ன ப்ளூ சட்டை: கடந்த சில வாரங்களாக அதிக ஹைப் கொடுத்து வந்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தரமான சம்பவமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். இதனால் சென்னை, தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் ஜெயிலர் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. முதல் நாள் மட்டுமின்றி ஆகஸ்ட் 15ம் தேதி வரையும் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகிவிட்டன.
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேபோல், விஜய்யின் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டார் நெல்சன். விஜய், நெல்சன், அனிருத் என செம்ம வெயிட்டான காம்போவில் வெளியான பீஸ்ட் வசூலில் மாஸ் காட்டினாலும், விமர்சன ரீதியாக பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் ஜெயிலரில் இருந்து நெல்சன் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த சர்ச்சையெல்லாம் மீறி ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இதனால், சூப்பர் ஸ்டாரை வைத்து தரமான சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட்டை பார்த்தால், எல்லாமே தலை கீழாகிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது. சும்மாவே சூப்பர் ஸ்டார் ரஜினியை ட்ரோல் செய்துகொண்டே இருப்பார் ப்ளூ சட்டை மாறன்.
ஜெயிலர் படத்தின் பாடல்கள், போஸ்டர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா, ரஜினியின் பேச்சு என ஒன்றுவிடாமல் அனைத்தையும் வச்சு செய்தார். படம் வெளியாகும் முன்பே பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை, இப்போது சும்மா இருப்பாரா என்ன.? வடிவேலு, ஆர் சுந்தர்ராஜனின் "கைய கொடுங்க சகல" என்ற காமெடி வீடியோவை ஷேர் செய்து, அதில் நெல்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இன்னொரு டிவீட்டில் "நெல்சன் நம்ம பக்கம் மகிழ்ச்சி, மகிழ்ச்சி" என குறிப்பிட்டுள்ளார்.
இதனை வைத்து பார்க்கும்போது, ப்ளூ சட்டை மாறனைப் போல நெல்சனும் ரஜினியை பங்கம் செய்துவிட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது ரஜினிக்கு ஹைப் கொடுக்கிறேன் என ஆக்ஷனில் ஓவர் டோஸ் கொடுத்துவிட்டாரா நெல்சன் என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவுகள் ரஜினி ரசிகர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ஜெயிலர் படம் குறித்து சில நெகட்டிவ் ட்ரோல்களும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











